வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கில், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை அடுத்து ஜெய்ஸ்வால், ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடினார். ராகுல் 38 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 58 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது.
சாய் சுதர்சன் அபாரம்:
எனினும் மறுமுனையில் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவருக்கு சாய் சுதர்சன் நல்ல கம்பெனி கொடுத்தார். தமக்கு கிடைக்கும் வாய்ப்பை வீணடித்து வருவதாக பல விமர்சனங்கள் இருந்தது. இதனால் அவர் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.
கடந்த டெஸ்ட் போட்டியில் செய்த தவறை இந்த போட்டியில் மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற கவனத்துடன் சாய் சுதர்சன் விளையாடினார். வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை அபாரமாக எதிர்கொண்டு சாய் சுதர்சன் ரன்களை சேர்த்தார். மறுமுனையில் ஜெய்ஸ்வால் தன்னுடைய ஏழாவது டெஸ்ட் சதத்தை அடிக்க சாய் சுதர்சன் சதத்தை தொடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
கவாஸ்கர் ஆறுதல்:
ஆனால் 87 ரன்கள் எடுத்திருந்தபோது எல்பிடபிள்யு ஆனார். இதன் மூலம் 13 ரன்களில் தன்னுடைய முதல் சதத்தை அவர் தவறவிட்டார். மேலும் சாய் சுதர்சனின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் இதுவாகும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர் சாய் சுதர்சன் சதத்தை தவறவிட்டாலும், இது ஒரு நல்ல ஸ்கோர் தான்.
இதையும் படிங்க: 23 வயதில் ஜெய்ஸ்வால் சாதனை.. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்தியா அதிரடி ஆட்டம்
8 ரன்களில் ஆட்டம் இழப்பதற்கு பதில் 87 ரன்களில் ஆட்டம் இழப்பது எப்போதுமே ஒரு நல்லது தான். எனினும் 87 ரன்களில் இப்படி ஆட்டம் இழக்கும் போது அது சாய் சுதர்சன் மனதில் நன்றாக பதியும். அடுத்த முறை இந்த தவறை செய்யக்கூடாது என்று அவர் நினைப்பார்.இதனை அவர் சதமாக மாற்ற முயற்சி செய்வார் என நம்புகிறேன். இப்படி கிடைக்கும் வாய்ப்பை சதமாகவும், பெரிய சதமாகவும் மாற்ற வேண்டும் என்று கவாஸ்கர் அவருக்கு ஆறுதல் கூறினார்.






