வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜெய்ஷ்வால் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டிக்கு ஜெய்ஸ்வால் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பட்டையை கிளப்ப வேண்டும் என்ற உத்வேகத்தில் களமிறங்கினார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் மூலம் தனது டெஸ்ட் கேப்டன் வாழ்க்கையில் இதில் முதல் முறையாக டாஸ் வென்றார். இதை அடுத்து களமிறங்கிய ஜெய்ஸ்வால் ராகுல் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர்.
அதிரடி ஆட்டம்:
குறிப்பாக ராகுல் அதிரடி காட்டி 54 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார். இதில் ஐந்து பௌண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். இந்த நிலையில் ராகுல் வாரிகண் பந்துவீச்சில் ஸ்டெம்ப் அவுட் ஆனார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 58 ரன்களை சேர்த்தது. மறுமுனையில் கொஞ்சம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் ஒரு கட்டத்திற்கு மேல் அவரும் அதிரடி காட்டினார்.
தொடர்ந்து மூன்று பவுண்டரிகளை அடித்து தன்னுடைய 13-வது அரை சதத்தை பூர்த்தி செய்துள்ளார். 23 வயதான ஜெய்ஸ்வால் தற்போது வரை 47 இன்னிங்ஸ் ஆடி இருக்கிறார். இதில் ஆறு சதம், 13 அரை சதம் அடங்கும். அதுமட்டுமில்லாமல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் 3000 ரன்களை எட்டிருக்கிறார்.
ஜெய்ஸ்வால் சாதனை
23 வயது ஆன ஜெய்ஸ்வால் இந்த மகத்தான சாதனையை ஏற்றி இருக்கிறார். இதேபோன்று மூன்றாவது வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 39.1 ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்திருக்கிறது.
இதையும் படிங்க:
முன்னதாக டெல்லி ஆடுகளும் குறித்து பேசிய இயன் பிஷப் ஆடுகளம் முதல் மூன்று நாட்களுக்கு பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்றும் அடுத்த இரண்டு நாட்களுக்கு சுழற்பந்துவீச்சுக்கு ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது டாஸ் தேர்வு செய்து இந்தியா முதலில் பேட்டிங் செய்திருப்பதால் அது மிகப்பெரிய சாதகமாக பார்க்கப்படுகிறது.






