இந்திய அணியில் அதிரடி மாற்றம்.. வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இளம் வீரர்களுக்கு இடம்! – ரிப்போர்ட்

0
13890

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபடுகின்றன.

ஐபிஎல் தொடர் முடிவுற்ற பிறகு இந்திய அணி கடந்த ஏழாம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பங்கேற்றது. இதில் ஆஸ்திரேலியா அணியிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

- Advertisement -

கடந்த முறை நியூசிலாந்து அணியிடம், இம்முறை ஆஸி., அணியிடம் என தொடர்ச்சியாக இரண்டாவது முறையை பைனல் வரை வந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோல் வெல்ல முடியாமல் தவறவிட்டது.

இதனால் அடுத்த 2023/25 வரை நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் சுற்றுகளில் பல்வேறு மாற்றங்களை இந்திய டெஸ்ட் அணியில் காணலாம் என்கிற பேச்சுக்கள் அடிப்படுகின்றன. இதனை வருகிற ஜூலை மாதம் துவங்கும் வெஸ்ட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து செய்யலாம் என்கிற முடிவுகளை பிசிசிஐ எடுத்துள்ளதாக தகவல்கள் வந்திருக்கின்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் முடிவுற்ற பிறகு, வருகிற ஜூலை 12ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் செய்யும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

- Advertisement -

டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்லாமல் டி20 போட்டிகளிலும் சில அதிரடி மாற்றங்கள் செய்ய உள்ளதாகவும் பிசிசிஐ உள்வட்டார தகவல்கள் வந்திருக்கின்றன. நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் அபாரமான செயல்பட்ட இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்புகள் கொடுத்து 2024ஆம் ஆண்டு வரவுள்ள டி20 உலககோப்பைக்கு முழு வீழ்ச்சுடன் தயார் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் ஓப்பனிங்கில் சிறப்பாக செயல்பட்ட ருத்துராஜ் மற்றும் ஜெய்ஸ்வால், விக்கெட் கீப்பிங்-பேட்ஸ்மேன் வரிசையில் நன்றாக செயல்பட்டு அதிரடி காட்டிய ஜித்தேஷ் சர்மா மற்றும் அசாத்தியமான பேட்டிங்கை வெளிப்படுத்தி பினிஷிங்கில் பலரின் கவனத்தையும் ஈர்த்த ரிங்கு சிங் ஆகிய நால்வருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் கொடுத்து பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதா கூறப்படுகிறது.

இந்திய முன்னணி வீரர்கள் காயத்தில் இருக்கின்றனர். அவர்களின் உடல்நிலை குறித்த அறிக்கைகளை இந்திய தேசிய அகடமியில் இருந்து பெற்றபிறகு அதற்கு ஏற்றவாறு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணி இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும்.

கடந்த ஜூன் 12-ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுபயணத்தின்போது நடைபெறவுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதனை பின்வருமாறு காணலாம்.

Pic Credit: bcci twitter