189 ரன்.. பட்டைய கிளப்பிய பவுலிங்.. நடராஜன் இந்திய செலக்டர்களுக்கு மெசேஜ்.. திருப்பூர் நெல்லை அணியை வென்றது

0
786
Natarajan

நடப்பு டிஎன்பிஎல் தொடரில் இன்று ஐட்ரீம் திருப்பூர் தமிழன் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நடராஜனின் சிறப்பான பந்துவீச்சில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற நெல்லை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் அமித் சாத்விக் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அதே சமயத்தில் மற்றுமொரு துவக்க ஆட்டக்காரர் துஷார் ரகேஜா அதிரடியாக 13 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து பேட்டிங்கில் மூன்றாவது இடத்தில் வந்த எஸ்.ராதாகிருஷ்ணன் 35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். முகமது அலி 29 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. நெல்லை அணியின் பந்துவீச்சில் சிலம்பரசன் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய நெல்லை அணிக்கு துவக்க ஆட்டக்காரர் மற்றும் கேப்டன் அருண் கார்த்திக் சிறப்பாக விளையாடி 36 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் அஜிடேஸ் குருசாமி கோல்டன் டக் ஆனார். தொடர்ந்து வந்த நிதிஷ் ராஜகோபால் மற்றும் எஸ்ஜெ.அருண்குமார் இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ரித்திக் ஈஸ்வரன் 39 பந்துகளில் 55 ரன்கள், சோனு யாதவ் 23 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அணியை வெற்றியை நோக்கி நகர்த்த முயற்சி செய்தார்கள். இந்த நிலையில் பந்து வீச்சுக்கு தன்னுடைய கடைசி இரண்டு ஓவருக்கு வந்த நடராஜன் சிறப்பான முறையில் செயல்பட்டு இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். மொத்தம் நான்கு ஓவரில் நான்கு விக்கெட்டை கைப்பற்றி ஆட்டத்தை மாற்றி கொடுத்தார்.

இதையும் படிங்க : சச்சின் தோனி போல ரோகித் கிடையாது.. கம்பீர் மாத்தி மாத்தி பேசி பல்டி அடிக்காதிங்க – ஸ்ரீகாந்த் பேச்சு

நடராஜன் தன்னுடைய முதல் இரண்டு ஓவரில் 10 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி நல்ல துவக்கத்தை கொடுத்தார். இறுதியில் வந்தும் முக்கியமான நேரத்தில் இரண்டு ஓவரில் இரண்டு விக்கெட்டை கைப்பற்றி ஆட்டத்தை மாற்றினார். இறுதியில் நெல்லை அணி 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுக்க, பரபரப்பான போட்டியில் ஐந்து ரன் வித்தியாசத்தில் திருப்பூர் அணி வெற்றி பெற்றது. நடராஜன் மீண்டும் தன்னுடைய சிறப்பான ஐபிஎல் ஃபார்மை டிஎன்பிஎல் தொடரிலும் தொடர ஆரம்பித்திருக்கிறார்!

- Advertisement -