தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 201 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் விட 288 ரன்கள் பின்தங்கி இருந்தது. ஆனால் தென்னாபிரிக்க அணி பாலோ ஆன் தராமல் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.
இதற்கான காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். தென்னாப்பிரிக்கா நினைத்திருந்தால் அவர்கள் இந்தியாவை மீண்டும் பேட்டிங் செய்ய சொல்லி இருக்கலாம். இதன் மூலம் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் கூட தென்னாப்பிரிக்கா வெற்றி முயற்சி செய்திருக்கலாம்.
அதுவும் வெறும் அரை மணி நேரம் ஆட்டம் மட்டுமே மூன்றாவது நாளில் எஞ்சிய நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத நேரத்தில் இந்தியாவை மீண்டும் பேட்டிங் செய்ய வைத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் இரவு ஓய்வுக்கு பிறகு நான்காவது நாளில் பந்து வீசி இருக்கலாம்.
ஆனால் இதையெல்லாம் ஏன் தென்னாபிரிக்க கேப்டன் பவுமா செய்யவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு ஒரே காரணம் ஆடுகளத்தில் நான்காவதாக பேட்டிங் செய்யக்கூடாது என்ற ஒரு விஷயம் தான். ஏனென்றால் தற்போது ஆடுகளம் பேட்டிங்கிற்கு கொஞ்சம் நெருக்கடியை தருகிறது. குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர்கள் பந்தை நன்றாக திருப்பி வருகின்றனர்.
இதன் மூலம் நான்காவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது கடினமாகிவிடும். ஒருவேளை இந்திய அணி ஃபாலோ ஆணை பெற்று இரண்டாவது இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் அடித்து விட்டு தென்னாப்பிரிக்காவுக்கு ஒரு 150 ரன்கள் இலக்காக நிர்ணயத்திருந்தாலே அதை வைத்து இந்திய அணி அபாரமாக பந்து வீசி வெற்றி பெற முயற்சி செய்யலாம்.
இதையும் படிங்க: இந்தியாவின் பேட்டிங்கை என் கண்களால் நம்பவே முடியவில்லை.. இப்படி ஒரு குழப்பம் ஏன்? முன்னாள் வீரர் சாடல்
ஆனால் தற்போது தென்னாபிரிக்கா இரண்டாவதாக பேட்டிங் செய்வதன் மூலம் கடைசி இன்னிங்ஸில் இந்தியாவுக்கு மிகப்பெரிய இலக்கை கொடுத்து துரத்த சொல்ல முடியும். இதன் மூலம் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி ஏற்படும். அதுமட்டுமில்லாமல் ஆடுகளமும் முற்றிலும் சுழற்பந்துவீக்கு சாதகமாக மாறி இருக்கும் தென்னாப்பிரிக்கா பவுலர்களும் நல்ல ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் திரும்பி இருப்பார்கள். இதையெல்லாம் காரணமாக வைத்துதான் ஃபாலோ ஆனை பவுமா தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.