பவுமாவுக்கு சல்யூட் அடிக்கனும்.. இதை செய்திருந்தால் இந்தியா வென்றிருக்கும்.. இர்பான் பதான் கருத்து

0
57

கொல்கத்தா டெஸ்டில் இந்தியாவை தோற்கடித்த தென்னாப்பிரிக்கா அணியை முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் புகழ்ந்து தள்ளினார். இதன் மூலம், இந்தப் போட்டி 3 நாட்களுக்குள் தோல்வியுற செய்தது.  டெம்பா பவுமா தலைமையிலான அணி வெற்றியை உருவாக்கிய விதத்திற்கு சல்யூட் அடிக்க வேண்டும் என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.

123 ரன்களை தற்காத்து, இந்தியாவை 93 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி 30 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று இரு டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில்  அரைசதம் அடித்து பவுமா, 93/7 இல் இருந்து அணியை மீட்டு போட்டியை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

சல்யூட் அடிக்கனும்:

தனது யூடியூப் சேனலின் பேசிய  பதான்,  “இந்தியா , தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் மூன்று நாட்களே நீடித்தது. மூன்று நாட்கள் கூட முடியவில்லை. பிட்ச் பற்றி பேச்சுகள் இருக்கும் ஆனால் டெம்பா பவுமாவின் அணி அபார கிரிக்கெட் ஆடியது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.”

“அவர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும். அதில் சந்தேகமில்லை. தென்னாப்பிரிக்காவின் கேப்டன் டெம்பா பவுமா அபாரமான  இன்னிங்ஸ் ஆடினார்.  சிறப்பான டிபென்ஸிவ் மற்றும் ஸ்வீப் டெக்னிக் காட்டினார்.  பவுன்ஸ் உள்ள பிட்சில் டெக்னிக் காட்டி, மகத்தான கட்டுப்பாடு வெளிப்படுத்தினார். நான்கு இன்னிங்ஸ்களில், ஒரே ஒரு வீரர் மட்டுமே அரைசதம் அடித்தார்.
டெம்பா பவுமா, முற்றிலும் அற்புதமான பேட்டிங் ஆடினார். அவர் அனைத்து புகழுக்கும் தகுதியானவர்.”

- Advertisement -

“அவரது கேப்டன்ஸி அபாரம். அணியை நன்றாக நடத்துகிறார். முழு அணியையும் மாற்றியமைத்தார். பவுமா தனது பேட்டிங்கையும் உயர்த்தியுள்ளார்.
இந்தியா பேட்டிங் செய்த விதம், அவர்கள் தங்கள் அணுகுமுறையை ஆக்ரோஷமாக மாற்ற வேண்டியிருந்தது. எனது பர்ஸ்ட் கிளாஸ், டெஸ்ட் அனுபவத்தின்படி, ஸ்பின்னிங் டிராக்குகளில் ஆடிய அனுபவத்தின்படி, 120-130 ரன்கள் சேஸிங்கில் நான்காவது இன்னிங்ஸில் டாப் செவன் பேட்ஸ்மேன்களில் குறைந்தது இருவர் ஸ்கோரிங்கை தொடர வேண்டும். பவுலர்களை தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.”

எப்படி விளையாடி இருக்கனும்:

“ஏனெனில் இரு பார்ட்னர்ஷிப்கள் மட்டுமே போட்டியை முடிக்க போதுமானது. அக்சர் படேலின் அணுகுமுறை பார்க்கத்தக்கது. ஒரே ஓவரில் சிக்ஸரும் பவுண்டரியும் அடித்து 26 ரன்கள் எடுத்தார். ஆனால் வேறு இரு பேட்ஸ்மேன்களாவது அதே அணுகுமுறை கொண்டிருந்தால் போட்டி முடிந்திருக்கும். எப்போதும் ஏரியல் ஷாட்கள் அடிக்க வேண்டியதில்லை.”

இதையும் படிங்க: இந்திய பேட்ஸ்மேன்கள் இந்த 3 விஷயத்தை செய்யலனா.. இங்க ஒரு டெஸ்ட்டை கூட ஜெயிக்க முடியாது – புஜாரா அறிவுரை

” போட்டி தொடர்ந்து நகர வேண்டும். பேட்ஸ்மேன்கள் கைகளை தளர்த்தி, மணிக்கட்டுகளால் ஆட வேண்டும். ஸ்பின்னர்களை ஆடும் நமது ஸ்கில் லெவல் ,சாஃப்ட் ஹேண்ட்ஸ் மற்றும் மணிக்கட்டுகள் பயன்படுத்துதல் ஆகியவை குறைந்துவிட்டது.” இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் இந்தியா,  தென்னாப்பிரிக்கா இடையே நவம்பர் 22 அன்று கவுகாத்தியில் தொடங்குகிறது.

- Advertisement -