கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

கோலி ஸ்டைலை பாலோ செய்யனும்… தோல்வியிலிருந்து பாடம் கற்று கொள்ளவில்லை.. வசீம் ஜாபர் கருத்து

இந்திய அணி நிர்வாகம், விராட் கோலி கேப்டனாக இருந்த காலத்தைப் போன்ற பிட்ச்களை தயாரிக்க, ஆடுகள பராமரிப்பாளரை  வலியுறுத்த வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாபர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்காவிடம் 30 ரன்கள் வித்தியாசத்தில்  தோல்வியடைந்தது.

- Advertisement -

124 ரன்கள் என்ற இலக்கை கூட துரத்த முடியாமல் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்தப் போட்டி மூன்று நாட்களில் முடிவடைந்தது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியை நடத்திய  ஏடன் கார்டன்ஸ் மைதானத்தின் பிட்ச் அதிகமாக டர்ன் அளித்ததாக விமர்சிக்கப்பட்டது.

ஆடுகளம் மீது விமர்சனம்:

இருப்பினும், செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இது நாங்கள் கேட்ட வகையான பிட்ச் தான் என்று ஒப்புக்கொண்டார் மற்றும் தனது பேட்ஸ்மேன்கள் கிரீஸில் சிறப்பாக தங்களைப் பயன்படுத்தத் தவறிவிட்டனர் என்று கடுமையாக விமர்சித்தார்.

போதுமான அளவு தங்கள் வீரர்களிடம் அனுபவம் இல்லை என்றும் இளம் வீரர்களால் இருப்பதால் இந்த தோல்வி ஏற்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார் ஆடுகளம் எவ்வாறு இருந்திருந்தாலும், இந்த இடத்தை எட்டி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள கம்பீர் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்றும் விளக்கம் அளித்து இருந்தார்.

- Advertisement -

கோலி ஸ்டைல்:

இது குறித்து பேசிய வசீம் ஜாபர், 2024-ல் நியூசிலாந்துக்கு எதிரான ஹோம் சீரிஸில் 0-3 என தோல்வியடைந்த தவறுகளிலிருந்து அணி பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்று  கூறினார்.  “நியூசிலாந்து தோல்வியிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை போல் தெரிகிறது. இத்தகைய பிட்ச்களில் நமது ஸ்பின்னர்களுக்கும் எதிரணி ஸ்பின்னர்களுக்கும் இடையிலான இடைவெளி குறைகிறது.”

இதையும் படிங்க: பவுமாவுக்கு சல்யூட் அடிக்கனும்.. இதை செய்திருந்தால் இந்தியா வென்றிருக்கும்.. இர்பான் பதான் கருத்து

” 2016-17 சீசனில் விராட் கேப்டனாக இருந்தபோது இங்கிலாந்தும் நியூசிலாந்தும் சுற்றுப்பயணம் செய்த கிளாஸிக் இந்திய பிட்ச்களுக்குத் திரும்ப வேண்டும்” என்று ஜாபர் தனது  X தளத்தில் பதிவிட்டுள்ளார்.  15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா ஹோமில் தென்னாப்பிரிக்காவிடம் டெஸ்ட் போட்டியை இழந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்களை எதிர்கொள்ளும் இரண்டாவது டெஸ்டில் வலுவாக கம்பேக் கொடுக்கும் என்று பண்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தப் போட்டி நவம்பர் 22 சனிக்கிழமை முதல் கவுகாத்தியில் உள்ள பர்சாபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

- Advertisement -
Published by

Recent Posts