93-7 விக்கெட் எடுத்த போது இந்திய ஊடகங்கள் போட்டி முடிந்ததாக நினைத்தனர்.. ஆனால் கொஞ்சம் கூட நம்பிக்கையை இழக்கவில்லை.. சைமன் ஹார்மர் பேச்சு

0
66

கொல்கத்தா  டெஸ்டில் இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 1-0 என தென்னாப்பிரிக்க தொடரில் முன்னிலை பெற்ற பிறகு, விமர்சகர்களை  சாடும் வலையில் அந்த அணியின் ஸ்பின்னர் சைமன் ஹார்மர் கூறினார். முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவை 189 ரன்களுக்கு கட்டுப்படுத்திய பிறகு, இரண்டாவது இன்னிங்ஸில் 153 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு 124 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

இரண்டாம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா 93/7 என்ற நிலையில் தத்தளித்தது. ஆனால் கேப்டன் டெம்பா பவுமாகார்பின் பாஷ் ஆகியோர் 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். பவுமா ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றினார். இது குறித்து பேசிய சைமன் ஹார்மர் பேசுகையில், “இரண்டாம் நாள் முடிவில் இந்திய மீடியா இந்த ஆட்டம் முடிந்துவிட்டதாக நினைத்தது

- Advertisement -

நம்பிக்கை இருந்தது:

” ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. டெம்பாவின் பேட்டிங் அவரது தளராத திட்டம். ஒரு பார்ட்னர்ஷிப் மட்டும் போதும் என்று நினைத்தோம். 150 வரை போய்விடலாம் என்று எதிர்பார்த்தோம். மார்கோ இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியவுடன், சுப்மன் கில் இல்லாததால் இந்தியா உண்மையில் 0 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்தது போலத்தான் இருந்தது. எல்லோரும் பங்களித்தனர்.”

“இது ஒரு உண்மையான குழு முயற்சி. இரண்டாம் நாள் முடிவில் டிரஸ்ஸிங் ரூமில் பேசிக்கொண்டது.  இந்தியாவில் பலமுறை தோல்வியை சந்தித்தவர்கள் இந்த டிரஸ்ஸிங் ரூமில் அதிகம். அதனால் இந்த வெற்றி மிகவும் சிறப்பானது. அக்ஸர் பட்டேல் இரண்டு சிக்ஸர்கள் அடித்தபோது ஸ்டேடியத்தில் சத்தம் அதிர்ந்தது. ஆனால் எல்லாம் நமக்கு சாதகமாக மாறியது,”

- Advertisement -

இந்தியாவில் பயிற்சி எடுத்தேன்:

“2016-ல் மும்பையில் உமேஷ் பட்வால் எனும் கோச்சை சந்தித்து பயிற்சி எடுத்தேன். நான் ஸ்பின் பற்றி தெரிந்து வைத்திருந்த அனைத்தையும் அவர் சிரித்துவிட்டார். மிகவும் வெறுப்பேற்றும் இரண்டு வாரங்கள் அது. ஆனால் அங்கிருந்து தொடங்கிய பரிணாம வளர்ச்சி இன்று வரை தொடர்கிறது. ஆஃப் ஸ்பின்னராக சிறியான சிறிய மாற்றங்களே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. பேட்ஸ்மேன்களுடன் போட்டியிடுவது மிகவும் பிடிக்கும்.”

இதையும் படிங்க: ஐபிஎல் மினி ஏலத்துல மும்பைக்கு.. நல்ல இன்டர்நெட் கனெக்சன் வேணும்.. காரணம் இதுதான் – ஆகாஷ் சோப்ரா கருத்து

“அதற்கு இந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.  ஏனெனில் இங்குதான் ஸ்பின்னை சிறப்பாக ஆடும் வீரர்கள் அதிகம்” என்று கூறினார். சைமன் ஹார்மர் இதுவரை 13 டெஸ்டுகளில் 60 விக்கெட்டுகளை 23.38 சராசரியுடன் வீழ்த்தியுள்ளார். 7 முறை 4 விக்கெட்டுகளும், ஒரு முறை 5 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். கொல்கத்தா டெஸ்டில் மொத்தமாக ஹார்மர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -