இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா ஈடுபட்டு வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது கௌஹாத்தியில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் உடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இதில் முதல் செஷனில் தென்னாபிரிக்க அணி விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் வெறும் 69 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இந்த நிலையில் இரண்டாவது செஷன் தொடங்கியவுடன் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது தென்னாபிரிக்க அணி 135 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 422 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. இந்த போட்டியின் போது
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், குல்தீப் யாதவிடம் அதிருப்தி தெரிவித்தது ஸ்டம்ப் மைக் மூலம் பதிவாகி வைரலாகியது.
சுப்மன் கில் இல்லாததால் கேப்டனாக செயல்பட்ட பண்ட், குல்தீப் ஒவ்வொரு ஓவரையும் தொடங்க இவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கடுமையாக எச்சரித்தார். இரண்டாம் நாளில் முதல்முறையாக ஸ்பின்னை அறிமுகப்படுத்திய இந்திய கேப்டன், 88-வது ஓவருக்கு குல்தீப் யாதவை பந்துவீச அழைத்தார்.
அதற்கு முன்பே தாமதமாக ஓவரை தொடன்கியதற்காக குல்தீப்க்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மூன்றாவது முறை எச்சரிக்கை வந்திருந்தால் இந்திய அணிக்கு 5 ரன் பெனால்டி விதிக்கப்பட்டிருக்கும். விதிப்படி, புதிய பந்துவீச்சாளர் ஒரு ஓவரை 60 விநாடிகளுக்குள் தொடங்க வேண்டும்.
இதையும் படிங்க: 316-6.. விக்கெட் தராமல் அடம்பிடிக்கும் தென் ஆப்பிரிக்கா.. சோர்ந்து போகும் இந்திய அணி.. வெல்ல முடியுமா?
அப்போது பேசிய ரிஷப் பண்ட், “30 செகண்ட் டைமர்தான் இருக்கு. வீட்டுல விளையாடுற மாதிரியா? ப்ளீஸ் சீக்கிரம் ஒரு பால் போடு. குல்தீப், ரெண்டு தடவை வார்னிங் கொடுத்தாச்சு. முழுசா ஓவர் வேண்டாம். டெஸ்ட் கிரிக்கெட்டை பரிகாசம் பண்ணிட்டு இருக்க. நான் ஃபீல்டு செட் பண்றேன்… நீ போடு. மத்ததெல்லாம் தானா பார்த்துக்கும்.” என்று கூறினார்.