இன்று போட்டியில் இரண்டாவது நாள் முதல் செசன் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி விக்கட் இல்லாமல் விளையாடி, இந்த போட்டியில் தற்போது முன்னிலையில் இருக்கிறது.
நேற்று தொடங்கிய இந்த போட்டியின் முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. இன்று இந்திய அணி மேற்கொண்டு 300 ரன்களில் ஆப்பிரிக்க அணியை கட்டுப்படுத்தினால் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பொய்த்துப் போன புதிய பந்து
இந்த நிலையில் நேற்று எடுக்கப்பட்ட இரண்டாவது புதிய பந்தில் இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்தது. அதில் சிராஜ் ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தார். எனவே இன்று புதிய பந்தில் பும்ரா மற்றும் சிராஜ் சிறப்பான முறையில் திருப்புமுனைகள் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்திய அணியின் எதிர்பார்ப்புக்கு மாறாக தென் ஆப்பிரிக்க முத்துசாமி மற்றும் வெர்ரின்னே இருவரும் சிறப்பாக தடுப்பாட்டம் விளையாடி, முதல் செஷன் முடிவில் விக்கெட் இழக்காமல் இந்திய அணியின் பக்கமாக அழுத்தத்தை திருப்பி இருக்கிறார்கள். இதன் காரணமாக இந்திய அணி அடுத்து வேகமாக ரன்கள் அடிக்க வேண்டி இருக்கும். ஆனால் அது இந்த ஆடுகளத்தில் சுலபமான விஷயம் இல்லை.
முத்துசாமியின் சிறப்பான ஆட்டம்
இன்று தென் ஆப்பிரிக்கா அணிக்காக தொடர்ந்து விளையாடிய முத்துசாமி சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அவரது தடுப்பாட்டத்தை உடைப்பது இந்திய பவுலர்களுக்கு மிகவும் கடினமாக இருந்து வருகிறது. இன்று இரண்டாவது நாள் முதல் ஸ்பெஷல் முடிவில் 111 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் தென்ஆப்பிரிக்கா எடுத்திருக்கிறது. முத்துசாமி 56 ரன், வெர்ன்னே 38 ரன் எடுத்து களத்தில் நிற்கிறார்கள்.
இதையும் படிங்க : பும்ராவின் பவுலிங்கால் இந்தியா தப்பித்தது.. குல்தீப்க்கு விக்கெட் கிடைத்ததற்கு காரணமும் பும்ரா தான்.. புஜாரா பாராட்டு
இந்தியா அணி இந்த போட்டியை வெல்ல வேண்டும் என்றால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். பிறகு குறைந்தது 500 ரன்கள் எடுக்க வேண்டும். அதையும் கொஞ்சம் விரைவாக எடுக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே இந்த போட்டியை வெல்ல முடியும். தற்போது இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா கைகளே ஓங்கி இருக்கிறது.






