சூர்யகுமார் கேப்டன்ஷியை பாருங்க.. இதுவே ரோகித் இருந்திருந்தால் நடப்பதே வேறு.. முகமது கையிப் பாராட்டு

0
184

முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் முகமது கைஃப், டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவை புகழ்ந்து ரோகித் சார்மாவுடன் ஒப்பிட்டு பாராட்டியுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 போட்டி, ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்ய அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 171 ரன்கள் எடுத்தது. இதில், இந்தியா நான்கு கேட்ச்களை தவறவிட்டது. பதிலுக்கு, அபிஷேக் ஷர்மாவின் 39 பந்துகளில் 74 ரன்கள் அடிக்க இந்தியா 7 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றியைப் பெற்றது.

- Advertisement -

சூர்யகுமாருக்கு பாராட்டு:

இது குறித்து முகமது கைஃப் தனது யூடியூப் சேனல் மூலம் சூர்யகுமாரைப் பற்றி பேசினார். நான்கு கேட்ச்கள் தவறியபோதிலும் அவர் அமைதியாகவும், கோபமின்றி இருந்ததைப் பாராட்டினார். அவர் கூறியது,“சூர்யகுமார் யாதவைப் பாருங்கள். நான்கு கேட்ச்கள் தவறியபோதும், அவர் அமைதியாகவே இருந்தார்.”

” அதாவது, அவர் எந்த கோபத்தையும் காட்டவில்லை. முற்றிலும் அமைதியாகவும், நிதானமாகவும் இருந்தார். இந்தியா, பாகிஸ்தான் போன்ற போட்டியில், பந்துவீச்சு சரியாக இல்லாவிட்டாலும், சூர்யகுமார் சிறிதும் பதற்றமடையவில்லை.”

- Advertisement -

85 சதவீத வெற்றி:

“அவர் கோபப்படுகிறாரா, யாரையாவது திட்டுகிறாரா என்று பார்த்தேன். அவர் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. இது ரோஹித் ஷர்மா கேப்டனாக வழிநடத்திய விதத்தை நினைவூட்டுகிறது. பந்துவீச்சாளர்களை ஆதரித்து, ஃபீல்டர்களை ஊக்குவித்து, கைதட்டி, ‘பரவாயில்லை, அடுத்த முறை கேட்ச் வரும்’ என்று சொல்வது நல்ல விசயம்”.

இதையும் படிங்க: நாங்க மோசமா ஆடுனாலும்.. பாகிஸ்தான் நீங்க ஜெயிக்க மாட்டீங்க.. காரணம் இதுதான் – மஞ்ச்ரேக்கர் பேச்சு

“சூர்யகுமார் அதே அமைதியான மற்றும் நிதானமான தலைமையைக் காட்டினார். அவர் 26 போட்டிகளில் கேப்டனாக இருந்து, 22-ஐ வென்றுள்ளார், இது கிட்டத்தட்ட 85% வெற்றி விகிதத்தைக் கொடுக்கிறது.”என்று முகமது கையிப் அவருடைய கேப்டன்ஷியை பாராட்டினார். ரோகித் சர்மா வீரர்களின் தவறான பில்டிங் மற்றும் கேட்சை விட்டால் கோபப்பட்டு அனைவரின் முன்பாக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவார்.

ஆனால் சூரிய குமார் யாதவ் அப்படி எந்த ஒரு வார்த்தையும் பயன்படுத்தாமல் வீரர்களுக்கு உறுதுணையாக இருப்பதாக முஹம்மது கைப் பாராட்டியுள்ளார் சூரியகுமார் கேப்டன் பதவிக்கு வந்த போது பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது அவருடைய செயல்பாடு மூலம் அனைத்தையும் முறியடித்திருக்கிறார். ஆனால் பேட்டிங்கில் மட்டும் அவர் பெரிய தாக்கத்தை கேப்டனாக பிறகு ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -