சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கிய லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் அணியாக அரையிறுதி சுற்றிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி ஏறக்குறைய தொடரை விட்டு வெளியேறி தள்ளப்பட்டு இருக்கிறது.
தற்போது நியூசிலாந்து அணி அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி, பாகிஸ்தான் அணி வங்கதேசத்துக்கு எதிராக பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அபாரமாக பந்து வீசினார்.
ஹர்திக் கையில் ஆரஞ்ச் நிற வாட்ச்:
எட்டு ஓவர்கள் வீசி அவர் வெறும் 31 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். குறிப்பாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம், 26 பந்துகளில் 23 ரன்கள் அடித்திருந்தார். இதில் 5 பவுண்டரி அடங்கும். பாபர் அபாயகரமாக விளங்கி வந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தான் அவரை ஆட்டம் இழக்க செய்தார்.
அப்போது ஹர்திக் பாண்டியாவுக்கு அவர் டாட்டா காண்பித்தார். அப்போதுதான் ஹர்திக் பாண்டியா கையில் ஒரு வாட்ச் கட்டிருந்தது தெரியவந்தது. பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் பலரும் இது போல் வாட்ச் கட்டிக் கொள்வது கிடையாது. ஆனால் ஹர்திக் பாண்டியா கட்டிக் கொண்டிருந்த வாட்ச் ஆரஞ்சு நிறத்தில் இருந்தது.
ரூ.7 கோடி மதிப்பிலான் வாட்ச்:
ஏதோ திருவிழாவில் கடையில் விற்கும் 100 ரூபாய் வாட்ச் போலிருக்கிறது என பார்த்தபோதுதான் ரசிகர்களுக்கு அந்த அதிர்ச்சி செய்தி தெரிய வந்தது. ஹர்திக் பாண்டியா கட்டியிருந்த அந்த வாட்சின் பெயர் ரிச்சர்ட் மில்லி ஆரம் 27- 02 சிஏஎஃப் கியூ டூர்பில்லியன் ரபேல்நடால் ஸ்கெலிட்டன் டயல் எடிசன் வாட்ச் ஆகும்.
இந்த வாட்சின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 7 கோடி ஆகும். உலகத்திலேயே இந்த வாட்ச் வெறும் 50 தான் தயாரிக்கப்பட்டது. இந்த வாட்ச் டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடாலுக்கு தயாரிக்கப்பட்டது. ஹர்திக் பாண்டியாவுக்கு வாட்ச் என்றால் மிகவும் பிடிக்குமாம். இதனால் விலை உயர்ந்த வாட்ச் களை தேடி கண்டுபிடித்து வாங்குவதை ஒரு பழக்கமாக வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க- விமர்சனம் குறித்து கவலை இல்லை.. இந்திய அணியில் என் வேலை இது மட்டும்தான் – விராட் கோலி பேட்டி
ரோலக்ஸ், பீனிக்ஸ் போன்ற விலை உயர்ந்த வாட்ச்களை வைத்திருந்த ஹர்திக் பாண்டியா தற்போது 7 கோடி ரூபாய் மதிப்புள்ள வாட்சும் வாங்கி அதனை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கட்டியிருந்தார். ஒருவேளை பந்து வாட்ச்சில் அடித்து அது உடைந்து இருந்தால் என்னவாயிருக்கும் என ரசிகர்கள் தற்போது ஆச்சரியப்பட்டு வருகின்றன.






