இந்தியா vs பாக். சிறந்த பில்டிங்கிற்கான விருது.. டிரஸிங் ரூம்க்குள் வந்த பிரபலம்.. துள்ளி குதித்த வீரர்கள்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ள நிலையில் விராட் கோலி தன்னுடைய 82வது சர்வதேச சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

- Advertisement -

இந்த வெற்றியை ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் பெரும் திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள்.  இந்த சூழலில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணியை போலவே இந்திய வீரர்களும் சில கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டனர்.

சிறந்த பில்டிங்கிற்கான விருது:

மேலும் சில கேட்ச்களை பிடித்தனர். இந்த சூழலில் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான பில்டிங்கை வெளிப்படுத்திய வீரர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி அண்மை காலமாக இந்திய கிரிக்கெட்டில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பில்டிங் செய்த மூன்று பெயரை அறிவித்த இந்திய அணியின் பில்டிங் பயிற்சியாளர் திலீப், அதில் ஒருவருக்கு விருதை வழங்கினார்.

இதில் ஜடேஜா, அக்சர் பட்டேல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூவரும் சிறந்த முறையில் பில்டிங் செய்ததாகவும், ஆனால்  அக்சர் பட்டேல் 2 ரன் அவுட், ஒரு கேட்ச் ப செய்ததால் அவருக்கு இந்த விருதை வழங்குவதாக திலீப் கூறினார். இந்த விருதை இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வழங்கினார்.

- Advertisement -

ரன் அவுட் செய்தது எப்படி:

தவான் இந்திய அணி டிரஸ்ஸிங் ரூமுக்கு வந்தவுடன் ஒட்டுமொத்த வீரர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இது  குறித்து பேசிய அக்சர் பட்டேல்,”அந்த பால் போடுவதற்கு முன்புதான் அவர் ரன் ஓடுவது போலவும் நான் அவரை ரன் அவுட் ஆக்குவது போலவும் நினைத்துப் பார்த்தேன்.”

“இதற்காக நான் தயாராகவும் இருந்தேன். நான் நினைத்தது போலவே அவரும் ரன் ஓடினார். இதனால் நான் பந்தை எடுத்து சரியாக ஸ்டெம்பை நோக்கி அடிக்க எனக்கு நேரம் சரியாக இருந்தது. இது நடந்து முடிந்தவுடன் நாம் முன்கூட்டியே இந்த காட்சியை நினைத்தது நல்ல விஷயமாக இருக்கிறது என்று நினைத்தேன்.”

இதையும் படிங்க- விராட் பிஆர் வச்சு கிங் ஆகல.. இந்த பட்டத்துக்கு பாபர் அசாம் தகுதியே கிடையாது – ஹபீஸ் விமர்சனம்

“ஏனென்றால் இப்படி நடக்கும் என்பதற்கு நான் என்னையே தயார்படுத்திக் கொண்டிருந்தேன். நான் இமாம் உல் ஹக் பேட்டிங் வீடியோவை பார்த்திருக்கிறேன். அதில் அவர் அதிகம் ரன் ஓட முயற்சி செய்தார்.எனவே அதற்கு நாங்கள் தயாராக இருந்தோம்” என்று அச்சர் பட்டேல் கூறியுள்ளார்.

- Advertisement -
Published by

Recent Posts