சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி 12 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றை அதிக முறை வென்ற அணி என்று பெருமையை இந்தியா படைத்திருக்கிறது.
இந்த சூழலில் இந்திய அணி வீரர்களுக்கு மத்தியில் பில்டிங் செய்வதை ஊக்கப்படுத்தும் விதமாக சிறந்த பில்டர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது. அந்த பழக்கத்தை தற்போது கம்பீர் பயிற்சியாளராக ஆன பிறகும் தொடர்ந்து வருகிறார்.
இறுதிப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் சில வாய்ப்புகளை தவற விட்டனர். குறிப்பாக ரச்சின் ரவீந்திரா 28 ரன்கள் எடுத்திருந்தபோது முகமது சமியும், ரச்சின் ரவீந்திரா 29 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்ரேயாஸ் ஐயரும் ஒரு கேட்ச் வாய்ப்பைத் தவற விட்டனர்.
வீரர்களுக்கு பாராட்டு:
எனினும் இது ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் பில்டிங்கிற்கான பரிசளிக்கும் நிகழ்ச்சியில் பேசிய பில்டிங் கோச் திலீப், “இதை நான் சொல்லியே ஆக வேண்டும். பில்டிங்கை பொறுத்தவரை இந்த தொடர் முழுவதும் நாம் களத்தில் சரியாக நடப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டோம்.”
“அந்த முயற்சியில் எந்த ஒரு குறையும் நாம் சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு வீரர்களும் களத்தில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டீர்கள். இது நமது பயணத்தை நோக்கி செல்ல மிகவும் உதவியாக இருந்தது. அதன் பலனாக தற்போது நாம் சாம்பியன்களாக நிற்கின்றோம்.”
விருது வென்ற ஜடேஜா:
“பில்டிங் என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கம் போன்றதாகும். ஒரு பக்கம் நன்றாக கேட்ச் பிடிப்பது களத்தில் விழிப்புணர்வுடன் இருப்பதாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அணியாக ஒருங்கிணைந்து செயல்படுவது களத்தில் நட்பு பாராட்டுவது வீரர்களுக்கு இடையே ஊக்குவிப்பது மறு பகுதியாகும். இந்த இரண்டையும் நாம் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செய்தோம்.”
இதையும் படிங்க: வருண் போட்டி முடிந்ததும்.. தினமும் போன் பண்ணி இதை கேட்பார்.. நான் இதை சொன்னேன் – தினேஷ் கார்த்திக் பேட்டி
“இறுதிப் போட்டியில் பொருத்தவரை இரண்டு வீரர்கள் தற்போது பில்டிங் விருதுக்கு போட்டி போடுகிறார்கள். ஒன்று நமது ஜடேஜா களத்தில் தன்னால் முடிந்த வரை சிறப்பாக செயல்பட்டு ரன்களை கட்டுப்படுத்துவது, ரன் அவுட் செய்வது என சிறப்பாக பணியை செய்தார்.இன்னொன்று நமது கேப்டன் ரோகித் சர்மா பந்தை தடுப்பதற்காக அவர் அடித்த டைவ் அவருடைய அர்ப்பணிப்பு உணர்வை காட்டுகிறது” என்று கூறிய திலிப் ஜடேஜாவுக்கு விருதை அளித்தார். இதை அடுத்து ஜடேஜா திலீப்பை கட்டியணைத்து நன்றி தெரிவித்தார்.






