இந்தியா vs நியூசி. 2வது டி20 போட்டி நடைபெறுமா? வானிலை நிலவரம் சொல்வது என்ன?

0
3005

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்கும். வெலிங்டனில் நடைபெற்ற முதல் ஆட்டம் ஒரு பந்து கூட வீச முடியாத நிலையில் மழையால் கைவிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர் இந்த நிலையில் இரண்டாவது ஆட்டம் மவுண்ட் மாங்குனியில் நடைபெறுகிறது.

- Advertisement -

இந்நிலையில் அங்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கிறது என்று தற்போது காண்போம். மவுண்ட் மாங்குனியில் நாளை மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை ஆட்டமும் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .மவுண்ட் மாங்குனியில் மைதானம் ரன்குவிப்புக்கு சாதகமான மைதானமாக செயல்படுகிறது. சர்வதேச t20 கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் அந்த மைதானத்தில் சராசரியாக 199 ரன்கள் அடிக்கப்படுகிறது.

மைதானத்தில் வேகப்பந்து வீச்சை விட சுழற் பந்து வீச்சு சற்று எடுபடும். சுழற் பந்துவீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு 8.05 ரன்களை கொடுத்திருக்கிறார்கள். இதுவே வேகப்பந்துவீச்சாளர்கள் அங்கு 9.65 ரன்களை கொடுத்திருக்கிறார்கள். இதனால் இந்திய அணி நாளை இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை களம் இறக்க வாய்ப்பு இருக்கிறது. ரிஷப் பண்ட் நாளைய ஆட்டத்தில் தொடக்க வீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ரிஷப் பண்ட் நடு வரிசையில் முதல் 10 பந்துகளை எதிர்கொள்ளும் போது அவருடைய ஸ்ட்ரைக் ரேட் வெறும் 112 ஆக தான் இருக்கிறது. இதனால் அவர் நடுவரசையில் சரி வர மாட்டார் என்பதை இதி காட்டுகிறது. ரிஷப் பண்ட் நாளைய ஆட்டத்தில் 30 ரன்கள் அடித்தால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்த 11-வது இந்திய வீரர் என்று பெருமையை பெறுவார்.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை மைதானத்தில் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி இருக்கிறார். அங்கு ஐந்து சர்வதேச டி20 போட்டியில் அவர் விளையாடி196 ரன்களை அடித்திருக்கிறார். இதில் ஸ்டிரைக் ரேட் 183 ஆகும். மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டாலும் குறைந்தபட்சம் 5 ஓவராவது வீசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி போட்டி அமேசான் பிரைமில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.