IND vs NEP.. 20.1 ஓவர்.. 10 விக்கெட் வித்தியாசம்.. இந்தியா அபார வெற்றி. 2வது சுற்றுக்கு தகுதி.. ஆசியக் கோப்பை அடுத்த சுற்று விபரங்கள் இதோ!

0
14712
ICT

11ஆவது ஆசியக் கோப்பையில் இந்தியா நேபாள் அணிகள் மோதிக்கொண்ட போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெல்லும் அணி இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும் என்கின்ற நிலை இருந்தது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதல் போட்டி போன்று பேட்டிங்கை தேர்வு செய்யவில்லை. மாறாக பந்துவீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

இந்திய அணியினரின் ஆரம்பக்கட்ட ஃபீல்டிங் மிக மோசமாக இருந்த காரணத்தினால், பங்களாதேஷ் துவக்க ஆட்டக்காரர்கள் முதல் விக்கட்டுக்கு 50 ரன்கள் கடந்தார்கள். அந்த அணியின் குஷால் புர்டெல் 25 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார். முதல் விக்கட்டுக்கு 65 ரன்கள் 10 ஓவரில் வந்தது.

நிலைத்து நின்று விளையாடிய மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் ஆஷிப் ஷேக் எட்டு பவுண்டரிகள் உடன் 97 பந்தில் 58 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து எட்டாவது விக்கட்டுக்கு வந்த சோம்பால் காமி 56 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 48 ரன்கள் இறுதி நேரத்தில் எடுத்தார்.

மேலும் குல்சன் 23, திபேந்திர சிங் 29 ரன்கள் எடுக்க 48.2 ஓவரில் 230 ரன்கள் எடுத்து நேபாள் அணி ஆல் அவுட் ஆனது. முகமது சிராஜ் 9.2 ஓவர்கள் பந்துவீசி, ஒரு மெய்டன் செய்து, 61 ரன்கள் விட்டுத் தந்து, மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரவீந்திர ஜடேஜா பத்து ஓவர்கள் பந்துவீசி, 40 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார். முகமது சமி, ஹர்திக் பாண்டியா, சர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணிக்கு மழை மீண்டும் வந்து தொந்தரவு கொடுத்தது. இதனால் 17 ரன்கள் விக்கெட் இழப்பில்லாமல் இந்திய அணி எடுத்திருக்க ஆட்டம் தடைப்பட்டது. இதற்கு அடுத்து ஆட்டம் நடைபெறுவது பெரிய சந்தேகம் என்ற நிலைதான் இருந்தது.

இந்த நிலையில் மழை நிற்க மீண்டும் துவங்கிய போட்டியில், 23 ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திய துவக்க ஜோடிகள் ரோஹித் சர்மா மற்றும் கில் இருவரும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்கள்.

மிகச் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா அதிரடியாக அரைசதத்தை நிறைவு செய்தார். அவருடன் இணைந்து அதிரடியாக விளையாடிய சுப்மன் கில்லும் அரைசதத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 59 பந்துகளில் ஆறு பவுண்டரி 5 சிக்ஸர்களுடன் 74 ரன்கள், சுப்மன் கில் 62 பந்துகளில் எட்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 67 ரன்கள் எடுக்க, 20.1 ஓவரில், 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாள் அணியை வீழ்த்தி இரண்டாவது சுற்று இந்தியா தகுதி பெற்றது.

முதல் சுற்று முடிவில் இந்தியா தனது குழுவில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. முதல் இடத்தை பாகிஸ்தான் பிடித்திருக்கிறது. இதையடுத்து இந்திய அணி இரண்டாவது சுற்று முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் 10ஆம் தேதியும், இரண்டாவது போட்டியில் பி பிரிவில் முதலிடத்தை பிடிக்கும் அணியுடன் 12ஆம் தேதியும், பி பிரிவில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணியுடன் மூன்றாவது போட்டியில் 15ஆம் தேதியும் மோதுகிறது.

இரண்டாம் சுற்றின் முடிவில் மொத்தம் நான்கு அணிகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் ஆகும். இறுதிப்போட்டி 17ஆம் தேதி நடக்கிறது.