IND vs NED.. தோனி ரெய்னாவின் மகத்தான சாதனை.. முறியடித்த கேஎல் ராகுல் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி.!

0
349

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பெங்களூரில் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. கில் மற்றும் ரோகித் சர்மா இந்தியாவிற்கு சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

கில் 51 ரன்களும் ரோகித் சர்மா 61 ரண்களும் எடுத்து ஆட்டம் இழக்க விராட் கோலி 51 ரன்னில் அவுட் ஆனார். துவக்க வீரர்கள் அமைத்துக் கொடுத்த சிறப்பான அடித்தளத்தை பயன்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ராகுல் இருவரும் இறுதியில் அதிரடியாக விளையாடி இந்தியா 50 ஓவர்களில் 410 ரன்கள் எடுக்க உதவினார்.

- Advertisement -

சிறப்பாக ஆடிய சுரேஷ் ஐயர் 94 பந்துகளில் 128 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். இதில் 10 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும். இவருடன் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் 64 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவர் 11 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடித்து இருந்தார். மேலும் இவர்கள் இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 208 ரன்கள் சேர்த்தனர்.

இந்திய அணியின் உலகக்கோப்பை வரலாற்றில் நான்காவது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும். இதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இணைந்து ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நான்காவது விக்கெட் 196 ரன்கள் சேர்த்தது இந்திய அணியின் சாதனையாக இருந்தது. இதனை தற்போது ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி முறியடித்து இருக்கிறது.

தற்போது நான்காவது விக்கெட்டுக்கு ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் எடுத்த 208 ரன்கள் பார்ட்னர்ஷிப் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறது . இதனைத் தொடர்ந்து தோனி மற்றும் ரெய்னா எடுத்த 196 ரன்கள் இரண்டாவது இடத்திலும் இந்த வருட உலக கோப்பையின் முதல் போட்டியில் விராட் கோலி மற்றும் ராகுல் எடுத்த 165 ரன்கள் மூன்றாவது இடத்திலும் உள்ளன. வினோத் காம்ப்ளி மற்றும் சித்து 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சிம்பாப்வே அணிக்கு எதிராக எடுத்த 142 ரன்கள் நான்காவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

தொடர்ந்து எட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா ஒன்பதாவது போட்டியிலும் வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் 411 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய நெதர்லாந்து அணி தற்போது வரை 169 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்திருக்கிறது. இந்தப் போட்டியிலும் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் ஒரு உலகக் கோப்பையில் அதிக தோல்விகள் இல்லாமல் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெறுவார். இதற்கு முன்பு 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியா எட்டு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போட்டியில் விராட் கோலி அரை சதம் எடுத்தார். இதன் மூலம் ஒரே உலகக்கோப்பையில் அதிக 50 பிளஸ் ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கருடன் பகிர்ந்து இருக்கிறார். மேலும் இந்த சாதனை கடந்த 2019 உலகக்கோப்பையில் பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷகீப் அல் ஹசன் சமன் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.