கிரிக்கெட்

இந்திய ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. பயிற்சியை தொடங்கிய அதிரடி வீரர்.. 4வது டெஸ்டில் பங்கேற்பது உறுதி

இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இந்த தருணத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், ஜஸ்ப்ரீத் பும்ராவின் பந்துவீச்சை தடுக்க முயன்றபோது, ரிஷப் பந்த்,இடது கை விரலில் காயம் அடைந்தார்.

- Advertisement -

இதனால், அந்த டெஸ்ட் போட்டியின் மீதமுள்ள நாட்களில் அவர் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. மாறாக துருவ் ஜுரேல் அந்த பொறுப்பை ஏற்றார். இருப்பினும், பந்த் இரு இன்னிங்ஸ்களிலும் பேட் செய்து, வலியுடன் போராடியபோது 74 மற்றும் 9 ரன்கள் எடுத்தார்.

ரசிகர்களுக்கு நிம்மதி:

மூன்றாவது டெஸ்டில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, முதல் பயிற்சி நாளில், உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஷாட், மான்செஸ்டரில் வரும் ஜூலை 23, புதன்கிழமை முதல் நடைபெறவுள்ள நான்காவது டெஸ்டுக்கு முன்பு பந்தின் காயம் கண்காணிக்கப்படும் என்று கூறினார்.

பந்த் மான்செஸ்டர் டெஸ்டில் விக்கெட் கீப்பிங் செய்யாமல், ஒரு  பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடுவார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.
அப்போது ஜுரேல் விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்பார். ஆனால், இந்தியாவின் சமீபத்திய பயிற்சி முகாம் இந்திய ரசிகர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கிறது.

- Advertisement -

ரிஷப் பந்த்  எப்படி செயல்பட்டார்?

ஏனெனில் பந்த் விக்கெட் கீப்பிங் பயிற்சிகளை தொடங்கியுள்ளார். இந்த பயிற்சிகள் மிகவும் அடிப்படையானவை என்றாலும், இந்திய துணைக் கேப்டன் விக்கெட் கீப்பிங் தொடங்கியிருப்பது அவர் உடல் தகுதி மீட்கும் பணியில் இறுதி கட்டத்தில் இருப்பதை குறிக்கிறது.

இதையும் படிங்க: இந்திய அணி பரிதாப நிலை.. பும்ராவுக்கு மட்டும் இது நடக்கலனா எல்லாமே வேஸ்ட் – சஞ்சய் மஞ்சுரேக்கர்

நடப்பு இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் அபாரமாக செயல்பட்டு வருகிறார். லீட்ஸில் உள்ள ஹெடிங்லேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில், பந்த் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து, டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை புரிந்த இரண்டாவது விக்கெட் கீப்பராக வரலாறு படைத்தார். ஹரித்வாரில் பிறந்த இவர், ஆறு இன்னிங்ஸ்களில் 425 ரன்களை 70.83 சராசரியுடன் குவித்துள்ளார். இரண்டு சதங்களுடன், இரண்டு அரைசதங்களையும் அவர் பதிவு செய்துள்ளார்.

- Advertisement -
Published by

Recent Posts