இந்திய அணி பரிதாப நிலை.. பும்ராவுக்கு மட்டும் இது நடக்கலனா எல்லாமே வேஸ்ட் – சஞ்சய் மஞ்சுரேக்கர்

0
31

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 23ஆம் தேதி மான்செஸ்டரில் நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்த போட்டியில் விளையாடும் இந்திய அணி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேகர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற சூழ்நிலையில் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று மற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. அதிலும் கடைசியாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தும், அதனை இந்திய அணி தவற விட்டது. இந்த சூழ்நிலையில் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ள நான்காவது போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலைமையில் உள்ளது.

இந்த டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா பணிச்சுமை மேலாண்மை காரணமாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்று கூறப்பட்டது. முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர், இந்திய அணி தோல்வி அடைந்த நிலையிலும் இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை. இருப்பினும் இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் மூன்றாவது போட்டியில் இந்திய அணி திரும்ப தோல்வி அடைந்திருக்கும்போது நான்காவது போட்டியில் இந்திய அணியின் நலன் கருதி அவர் விளையாடுவார் என்று தெரிகிறது. இந்த சூழ்நிலையில் பும்ரா நான்காவது போட்டியில் விளையாடவில்லையென்றால் எனக்கு அது பெரிய ஆச்சரியத்தை அளிக்கும் என சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது இல்லன்னா அதிர்ச்சி அடைவேன்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான்காவது டெஸ்ட் போட்டிக்கு ஓய்வெடுத்து விட்டு தொடரையும் இழந்து விட்டு அதற்கு பிறகு ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. மேலும் அவருக்கு தற்போது சிறந்த இடைவெளியும் உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பந்து வீசும் போது கொஞ்சம் சோர்வாக காணப்பட்டார். அவர் சுமையை உணர்கிறார் என்று உணர்ந்தீர்கள்.

இதையும் படிங்க:இங்கிலாந்து தொடரில் தோற்றாலும் பரவாயில்லை.. இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு இவர் கொண்டு செல்வார்.. ஹர்பஜன் சிங்

ஆனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் கடைசி ஸ்பெல் வீச மிகவும் ஆர்வமாக இருந்தார். ஏனென்றால் ஒரு பெரிய இடைவெளி இருப்பதை அவர் அறிந்திருந்ததால் கடைசி ஸ்பெல் வீச ஆர்வமாக இருந்தார். முதல்முறையாக அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத போது நான் ஆச்சரியப்பட்டேன். அதேபோல நான்காவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடவில்லை என்றால் அதிர்ச்சி அடைவேன்” என சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -