இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து ஆச்சரியப்படும் முடிவை எடுத்திருக்கிறது.
மேலும் இந்திய அணி நிர்வாகமும் பெரிய மாற்றங்கள் செய்யாமல் புத்திசாலித்தனமாக செயல்பட்டு இருக்கிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்வதற்கான அதிக வாய்ப்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து ஆச்சரிய முடிவு
இன்றைய மூன்றாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. டாஸ் வென்றால் பந்துவீச்சை தேர்வு செய்வது சரியானதாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வந்தார்கள். இந்த நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
கடந்த இரண்டு போட்டிகளாக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்வதற்கு பதிலாக பந்துவீச்சை தேர்வு செய்தது இங்கிலாந்து கேப்டன் மீது விமர்சனங்களை உருவாக்கி இருந்தது. இதன் காரணமாக தற்போது தவறான முடிவெடுத்து விட்டதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இரண்டாவது போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜோஸ் டங்க் நீக்கப்பட்டு ஜோப்ரா ஆர்ச்சர் நான்கு வருடங்கள் கழித்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பியிருக்கிறார்.
இந்தியா புத்திசாலித்தன முடிவு
இந்திய அணியில் பேட்டிங் வரிசை 8 வரையில் மீண்டும் தக்கவைக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் அணியில் ஒரே ஒரு மாற்றமாக பிரசித்தி கிருஷ்ணா இடத்திற்கு பும்ரா கொண்டுவரப்பட்டு இருக்கிறார். மீண்டும் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
மேலும் ரவீந்திர ஜடேஜா நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் என மூன்று ஆல் கவுண்டர்கள் விளையாடுகிறார்கள். இதன் மூலம் மீண்டும் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி, அதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி பந்துவீச்சை வைத்து வெல்ல இந்திய அணி முடிவு செய்திருப்பது தெரிகிறது.
இதையும் படிங்க : நான் வானிலை ஆய்வு மையத்தில் வேலை செய்யல.. தேவை இல்லாம பேசாதீங்க.. கடுப்பான ஸ்டோக்ஸ் காரணம் என்ன?
இந்திய பிளேயிங் XI: ஜெய்ஸ்வால், கேஎல்.ராகுல், கருண் நாயர், கேப்டன் கில், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், பும்ரா, சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப்.






