இந்திய டெஸ்ட் அணி இனி எவ்வாறு இயங்கும் என்பது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அதிரடியான கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என சமன் செய்தது. இளம் இந்திய அணி என்பதால் தொடரை இழந்து விடும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்திருந்த நிலையில் தற்போது தொடரை சமன் செய்து சாதித்திருக்கிறது.
எழுந்த பல வீரர்கள்
இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராக கேப்டன் கில் மற்றும் அதிக விக்கெட் கைப் பற்றிய வீரராக முகமது சிராஜ் இருவரும் அசத்தியிருக்கிறார்கள். இது மட்டுமே இல்லாமல் பல தருணங்களில் பல வீரர்கள் சிறந்த பங்களிப்பை கொடுத்து போட்டியில் இந்திய அணியை பின் தங்காமல் காப்பாற்றி இருக்கிறார்கள்.
இந்த வகையில் கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா 500க்கும் மேற்பட்ட ரன்கள், ஜெயஸ்வால் 400க்கும் மேற்பட்ட ரன்கள், வாஷிங்டன் சுந்தரின் சதம் மற்றும் அரை சதம், மேலும் பும்ரா, ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா என பந்துவீச்சில் முக்கியமான கட்டங்களில் கைப்பற்றிய விக்கெட்டுகள் என அனைவரது பங்களிப்பும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது.
இனி இப்படித்தான்
இது குறித்து பேசி இருக்கும் பயிற்சியாளர் கம்பீர் கூறும் பொழுது “இந்த டெஸ்ட் அணியின் சித்தாந்தம் என்னவென்றால் தனி நபரை மையமாக வைத்து இயங்காது என்பதுதான். எப்பொழுதுமே வீரர்கள் தங்களுக்கு தகுதியானதை பெற வேண்டும் என நான் நினைக்கிறேன். அவர்கள் விரும்புவதை பெற வேண்டும் என்பது கிடையாது. மேலும் எங்களுடைய வீரர்கள் இதற்கு தகுதியானவர்கள்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : இனியாவது சிராஜை மதிங்க.. அவர் இந்த மாதிரி அதிசய வீரர்.. கம்பீர் கில் கவனம் – அஸ்வின் கோரிக்கை
இந்த நிலையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரின் திடீர் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வுக்கு கம்பீர் காரணம் என்று தற்பொழுது தெளிவாக தெரிந்து விட்டதாகவும், முன்னணி வீரர்களை அவர்தான் வெளியேற்றினார் எனவும் தற்போது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.






