இந்தியா, இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி.. பிட்ச் ரிப்போர்ட்.. நேரம் என்ன? எந்த சேனல், ஒடிடியில் பார்க்கலாம்

0
579

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெள்ளிகிழமை தொடங்குகிறது. லீட்ஸ் நகரில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் மூன்று முப்பது மணிக்கு தொடங்கும். விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் முகமது சமி உள்ளிட்ட வீரர்கள் இல்லாமல் இந்திய அணி இந்த தொடரில் களமிறங்குகிறது.

சுப்மன் கில் தலைமையில் ஜெய்ஸ்வால், ரிஷப் பன்ட்,கே எல் ராகுல், கருண் நாயர் உள்ளிட்ட வீரர்கள் புதிய அத்தியாயத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள். லீட்ஸ் ஆடுகளம் சுழற் பந்துவீச்சு சாதகமாக அமைக்கப்படும் என இந்திய தரப்பு எதிர்பார்த்தது. ஆனால் தற்போது ஆடுகளத்தில் புற்கள் முழுவதுமாக இருக்கிறது.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:

இதன் மூலம் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இங்கிலாந்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டால் பந்து திடீரென்று ஸ்விங் ஆகி வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும்.அதுவே வெயில் வந்தால் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். அப்போது சுழற் பந்துவீச்சாளர்கள் கை ஓங்கும்.

இந்த நிலையில் லீட்ஸ் நகரில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு அபாயத்திலிருந்து இந்திய வீரர்கள் தப்பித்து இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இங்கிலாந்து அணி அறிவித்துள்ள தங்களது பிளேயிங் லெவனில் ஜாஸ் டங்க் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோர் அனுபவம் குறைந்த வீரர்கள் ஆவார்கள்.

- Advertisement -

எந்த சேனல், ஒடிடியில் பார்க்கலாம்:

இங்கிலாந்து அணியின் பேட்டிங் வலுவாக இருந்த போதிலும், பந்துவீச்சு சற்று பலமின்றி காணப்படுகிறது. இதேபோன்று இந்திய அணி வேகப்பந்து வீச்சும் பயிற்சி ஆட்டத்தில் அதிக அளவு ரன்களை விட்டுக் கொடுத்தது, ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இங்கிலாந்து அணியில் பென் டக்கட், ஹாரி புரூக், ஜோ ரூட்,ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்துவார்கள்.

இதையும் படிங்க: இந்தியா கூட எங்களுக்கு நடக்கிறது பயிற்சி போட்டி மாதிரி.. 4-1னு கதைய முடிச்சு அனுப்புவோம் – கிரேம் ஸ்வான் சவால்

இதனால், இந்திய அணி தங்களுடைய பந்துவீச்சில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் தள்ளப்பட்டு இருக்கிறது.இந்த சூழலில் இந்த போட்டிகள் அனைத்தும் தொலைக்காட்சியில் சோனி 1 சேனலில் பார்க்கலாம். ஓ டி டி தளத்தில் ஜியோ ஹாட்ஸ்டார் இல் இந்த போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

- Advertisement -