இந்தியா கூட எங்களுக்கு நடக்கிறது பயிற்சி போட்டி மாதிரி.. 4-1னு கதைய முடிச்சு அனுப்புவோம் – கிரேம் ஸ்வான் சவால்

0
146
Swann

இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்து அணிக்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஸஸ் தொடருக்கான பயிற்சியாக அமையும் என இங்கிலாந்து முன்னால் வீரர் கிரேம் ஸ்வான் கூறியிருப்பது சர்ச்சையாக மாறியிருக்கிறது.

இங்கிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் நாளை முதல் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிறந்த பயிற்சியாக இருக்கும்

சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் ஆசஸ் டெஸ்ட் தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு உலக கிரிக்கெட் ரசிகர்களிடம் இருக்கிறது. மேலும் இரண்டு நாடுகளும் உலகக் கோப்பையை வெல்வதைவிட ஆசஸ் தொடரை வெல்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

இதுகுறித்து கிரேம் ஸ்வான் கூறும் பொழுது ” உண்மையைச் சொல்லப்போனால் இங்கிலாந்து அணி ஆசிஸ் தொடர் விளையாடுவதற்கு முன்பாக இது சிறந்த வார்ம் அப்பாக இருக்கும். கடைசியாக நாங்கள் இரண்டு மூன்று முறை இந்தியாவிற்கு சென்ற பொழுது முழுமையாக தோல்வி அடைந்திருந்தோம். எனவே எங்கள் சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும். அதற்கு நாங்கள் நல்ல முறையில் விளையாட வேண்டும்”

- Advertisement -

இந்திய அணிக்கான பின்னடைவு

“தற்போது இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருக்கப் போவது கிடையாது. அவர்கள் இருவரும் அனுபவம் வாய்ந்த சூப்பர் ஸ்டார்கள். அவர்கள் இல்லாத நிலையில் வேறு சில சிறந்த வீரர்கள் வருகிறார்கள். ஆனால் எங்கள் கண்டிஷனை பயன்படுத்திக் கொள்வதற்கு எங்களிடம் சிறந்த பவுலர்கள் இருக்கிறார்கள்”

இதையும் படிங்க : நான் விராட் கோலிய அவமானப்படுத்த அப்படி செய்யல.. ஆனா கிரிக்கெட்ட விட பெருசு யாருமில்ல – அஸ்வின் விளக்கம்

“இந்த தொடரை வெல்வதற்கு இங்கிலாந்து முயற்சி செய்ய வேண்டும். மேலும் இங்கிலாந்து அணி முயற்சியை வெளிப்படுத்தும் பொழுது நான்குக்கு ஒன்று என இந்திய அணியை வெல்ல முடியும். இந்திய அணிக்கு எதிராக மிகச்சிறந்த முறையில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஸஸ் தொடருக்கான நம்பிக்கையை பெறுவோம்” என்று நம்புகிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -