சேவாக் கிட்ட சிக்கிட்டாரு கில்.. ஸ்டோக்ஸ் முன்னால ரொம்ப குழப்பமா நிக்கறாரு – டேவிட் லாயிட் விமர்சனம்

0
138
Gill

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் இந்தியாவின் வீரேந்தர் சேவாக்குக்கு மிகச்சிறந்த பதிலாக இருக்கிறார் என இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாயிட் பாராட்டி இருக்கிறார்.

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அரை சதமும் இரண்டாவது இன்னிங்சில் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 149 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருதை பென் டக்கெட் வென்றார்.

- Advertisement -

வீரேந்தர் சேவாக் ஜெராக்ஸ்

உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு துவக்க வீரராக முதல் பந்தில் இருந்து அதிரடியாக விளையாடி போட்டியை மாற்றக்கூடிய முதல் வீரராக இந்தியாவின் வீரேந்தர் சேவாக் இருந்தார். தற்போது வரையில் துவக்க இடத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய இடத்தை நிரப்புவதற்கு யாரும் வரவில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் இடதுகை தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் தற்போது வீரேந்தர் சேவாக்குக்கு சிறந்த பதில் வீரராக கிடைத்துவிட்டார் என்றும், அவர் விளையாடக்கூடிய ரிவர்ஸ் ஸ்வீப் மிகவும் சிறப்பான ஷாட் என்றும் கேப்டன்ஷியில் குழப்பம் அடையக்கூடிய நபர் எனவும் டேவிட் லாயிட் கூறியிருக்கிறார்.

- Advertisement -

கில் குழப்பம் அடைகிறார்

இதுகுறித்து டேவிட் லாயிட் கூறும் பொழுது “தற்போது பென் டக்கெட் வீரேந்தர் சேவாக்குக்கு இணையான வீரராக இருக்கிறார். மட்டும் இல்லாமல் உலக டெஸ்ட் லெவனின் பிளேயிங் லெவனில் துவக்க ஆட்டக்காரராக இவரே இருப்பார். ரிவர்ஸ் ஸ்வீப் அவருக்கு மிகவும் இயல்பான ஒரு ஷாட்டாக இருக்கிறது. அவர் பள்ளி காலத்தில் ஹாக்கி விளையாடியவர் என்பதால் இதில் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால் இந்த ஷாட் ஹாக்கியில் விளையாடப்படக்கூடியதுதான்”

இதையும் படிங்க : 442 ரன்ஸ்.. மத்ரே சூரியவன்சி ஏமாற்றம்.. 9வது இடத்தில் 52 பந்தில் சதம்.. இங்கிலாந்தை புரட்டி எடுத்த இந்திய U19 அணி

“இந்த தொடரில் கேப்டன்சி மிகப்பெரிய பங்கை வகிக்கும். கேப்டன் பொறுப்பில் ஸ்டோக்ஸ் மிகவும் முன்னோக்கி சிந்திக்க கூடியவர், முன்னால் இருக்கக்கூடியவர். மேலும் களத்தில் அமைதியாகவும் அதே சமயத்தில் அதிகாரம் செலுத்தக்கூடியவராகவும் இருப்பவர். இந்த நிலையில் கில்லை எடுத்துக் கொண்டால் அவர் முதலில் வினையாற்ற கூடியவராக இல்லாமல் வினைக்கு எதிர்வினை ஆற்றக் கூடியவராக இருக்கிறார். இதன் காரணமாக அவர் காலத்தில் அதிகம் குழப்பம் அடைவதை பார்க்க முடிகிறது. புதியவராக இருப்பதால் இது நடக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -