வீடியோ: என்னவொரு வெறித்தனம்… போன மேட்ச் இந்தியா தோல்விக்கு காரணமான ஆஸி., வீரரின் விக்கெட்டை தூக்கிய பின் வெறியோடு கத்திய அஸ்வின்..!

0
427

நான்காவது டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்திய பிறகு ஆக்ரோசத்தை வெளிப்படுத்திய ரவிச்சந்திரன் அஸ்வின் செயலின் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்மித், மைதானம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கிறது என்று உணர்ந்து, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

- Advertisement -

கடந்த 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற முனைப்புடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விரைவாக பவுண்டரிகள் அடித்து ரன்களை குவிக்க துவங்கினர்.

முதல் 10 ஓவர்களில் விக்கெட்ட எதுவும் விழாததால் இந்திய பவுளர்களின் மீது அழுத்தம் அதிகமானது. அதன் பிறகு பந்துவீச வந்த இந்திய அணியின் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் வரிசையாக தாக்குதலை நடத்தினார்.

டிராவிஸ் ஹெட் மற்றும் உஸ்மான் கவாஜா இருவரும் முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்திருந்தனர். அப்போது ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்தை தூக்கி அடிக்க முயற்சித்த டிராவிஸ் ஹெட், மிட் விக்கெட் திசையில் நின்றுகொண்டிருந்த ஜடேஜாவின் கையில் பிடிபட்டு ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

கடந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 76 ரன்களை சேஸ் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு 49 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை பெற்றுக் கொடுத்தவர் டிராவிஸ் ஹெட் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கெட் விடாமல் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு சிக்கலையும் ஏற்படுத்தினார்.

இவரது விக்கெட்டை வீழ்த்திய பிறகு ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார் அஸ்வின். இந்த வீடியோ பதிவு இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோ: