IND vs AUS: செமி பைனல் நடக்கும் நேரம்.. ரிசர்வ் டே இருக்கா.?. மழையால் போட்டி ரத்தானால் என்ன நடக்கும்.?. முழு விபரம்

0
1921

சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இன்றுடன் முடிவடைந்துவிட்டது. இதன் முடிவில் ஏ பிரிவில் இந்திய அணி முதல் இடத்திலும் நியூசிலாந்த அணி இரண்டாவது இடத்திலும் பிடித்திருக்கின்றது.

பி பிரிவில் தென்னாப்பிரிக்கா அணி முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திலும் பிடித்துள்ளது. இந்த சூழலில் தற்போது அரையிறுதியில் யார் எந்த அணியுடன் மோதுவார்கள். அதன் அட்டவணை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

- Advertisement -

இந்தியா ஆட்டம் எப்போது?

இந்தியா ஹைபிரிட் மாடல் முறைப்படி துபாயில் தான் அனைத்து போட்டிகளிலும் விளையாடுகிறது. இதன் காரணமாக வரும் நான்காம் தேதி செவ்வாய்க்கிழமை இந்திய நேரப்படி மதியம் 2:30 மணிக்கு முதல் அரை இறுதி போட்டி நடைபெறுகிறது.

இதில் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்திய அணியும், பி பிரிவில் இரண்டாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா அணியும் பல பரீட்சை நடத்தும். இதேபோன்று மார்ச் 5ஆம் தேதி லாகூரில் இரண்டாவது அரை இறுதி ஆட்டம் நடைபெறும். இதில் நியூசிலாந்து அணியை தென்னாப்பிரிக்கா எதிர்கொள்கிறது.

- Advertisement -

அரையிறுதிக்கு ரிசர்வ் டே எப்போது?

இந்தத் தொடரில் மூன்று முக்கிய ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அரை இறுதிப்போட்டி ரத்தனால் என்ன நடக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். உதாரணத்திற்கு மார்ச் 4-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் எந்த இடத்தில் போட்டி தடைபட்டதோ, அதே இடத்தில் இருந்து மீண்டும் மார்ச் 6ஆம் தேதி தொடங்கும்.

இரண்டு அணிகளும் 20 ஓவர் விளையாடினால் மட்டுமே டக்வொர்த் லூயிஸ் விதி நடைமுறைப்படுத்தப்படும். ஒருவேளை  அன்றும் மழை பெய்தால் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

இதன் காரணமாக இந்தியா இறுதிப் போட்டிக்கு சென்றதாக அறிவிக்கப்படும். இதே போன்று நியூசிலாந்து, தென்னாபிரிக்கா மோதும் ஆட்டமும் மழையால் தடை பட்டால் மார்ச் 7ஆம் தேதி அன்று நடத்தப்படும். அதிலும் மழை குறுக்கிட்டு தடைப் பட்டால் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்ததால்  தென்னாப்பிரிக்கா அணி பைனலுக்கு செல்லும்.

இதையும் படிங்க: வருண் சக்கரவர்த்தி செய்த தவறு.. நம்ப முடியாமல் திகைத்து போய் நின்ன கோலி ஹர்திக் பாண்டியா.. என்ன நடந்தது.?

ஒருவேளை இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் துபாயில் மார்ச் ஒன்பதாம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும். அந்த ஆட்டம் மழையால் தடைப் பட்டால் மார்ச் 10ஆம் தேதி திங்கட்கிழமை அதே துபாய் மைதானத்தில் பைனல் நடைபெறும். ஒருவேளை இந்திய அணி பைனலுக்கு செல்லவில்லை என்றால் லாகூரில் இறுதிப்போட்டி நடத்தப்படும்.

- Advertisement -