IND vs AUS.. மிட்சல் மார்ஸ்க்கு மாஸான ஸ்கெட்ச் போட்ட ரோகித் சர்மா.. ஃபீல்டில் என்ன நடந்தது?

0
812
Rohit

இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வென்று தொடரையும் கைப்பற்றிய நிலையில், இன்று ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் டாசியில் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன்பேட்டிங் செய்வது என அறிவித்தார். ஆஸ்திரேலியா அணியில் ஐந்து மாற்றங்கள் இருந்தது. இது போலவே இந்திய அணிகளும் ஐந்து மாற்றங்கள் இருந்தது.

- Advertisement -

இந்த முறை துவக்க ஆட்டக்காரர்களாக ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் மிட்சல் மார்ஸ் இருவரும் வந்தார்கள். பும்ராவை மார்ஸ் குறி வைத்து அடிக்க, உடனே சுதாரித்த டேவிட் வார்னர் ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டார்.

இதற்கு அடுத்து மார்ஸ் விளையாடுவதற்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதிரடியை கையில் எடுத்த டேவிட் வார்னர் தனி ஆளாக இந்திய பந்துவீச்சை நொறுக்கி தள்ளினார். வான வேடிக்கை காட்டிய அவர் அதிரடியாக அரை சதம் அடித்து, 8.1 ஓவரில் ஆஸ்திரேலியா 78 ரன்கள் அடித்திருக்க, 34 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதற்கு அடுத்து மார்ஸ் உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்து சீராக ரன்களை அடிக்க ஆரம்பித்தார்கள். நிதானம் காட்டி இருவரும் அரை சதம் கடந்தார்கள். மார்ச் மெதுவாக தான் சந்திக்கும் ஒவ்வொரு ஓவரிலும் ஒரு பவுண்டரியை அடிக்க ஆரம்பித்தார்.

- Advertisement -

இந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா பும்ராவை திரும்ப கொண்டுவர, அவருக்காகவே காத்திருந்தது போல ஒரே ஓவரில் நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 22 ரன்கள் விளாசினார். இன்னொரு புறத்தில் குல்தீப்பையும் மெதுவாகத் தாக்க ஆரம்பித்தார்.

இந்த நேரத்தில் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை ஆப் சைடு மிகவும் பலப்படுத்தினார். அந்தப் புறமாக ஐந்து பேரை நிறுத்தினார். மேலும் குல்தீப்பை தொடர்ச்சியாக கூக்ளி வீசச் சொன்னார். உள்ளே வரும் பந்துகளுக்கு மார்ஸ் எளிமையாக விளையாடியதால், ரோகித் சர்மா இந்த திட்டத்திற்கு வந்தார்.

இதற்கு கை மேல் பலனாக குல்தீப் வீசிய கூக்ளி வெளியே செல்ல, அதை ரிஸ்க் எடுத்து ஆஃப் சைட் பவுண்டரி அடிக்க மார்ஸ் முயற்சி செய்ய, பந்து காற்றில் பறந்து பிரசித் கிருஷ்ணா வசம் கேட்ச் ஆனது. ரோகித் சர்மாவின் கேப்டன்சி அனுபவம் உடனே வேலை செய்தது.

மிகச் சிறப்பாக விளையாடிய மார்ஸ் 84 பந்தில் 13 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 96 ரன்கள் எடுத்து சதத்தை தவற விட்டு ஏமாற்றமாக வெளியேறினார். சொல்லப்போனால் ரோஹித் சர்மா அவரது சதத்தை பறித்து விட்டார் எனலாம்!