அஸ்வின் என்கிட்ட ட்ரிக்ஸ் அவுட்டாக பாத்தாரு.. ஆனால் நான் என்னோட ட்ரிக்ஸ் யூஸ் பண்ணி அவரை ஈஸியா ஆடிட்டேன், 4வது டெஸ்டிலும் எனக்கு பயமில்லை – மார்னஸ் லபுச்சானே பேட்டி!

0
1606

நான்காவது டெஸ்டில் அஸ்வினை எப்படி எதிர்கொள்வது என்பது எனக்கு நன்றாக தெரியும், எவ்வித பயமும் இன்றி செயல்படுவேன் என தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் மார்னஸ் லபுச்சானே.

ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களிடம் ஆஸ்திரேலியா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் திக்கித்திணறி ஆட்டமிழந்து வந்தனர்.

- Advertisement -

ஆனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சற்று சுதாரித்துக்கொண்ட நன்றாக விளையாடி வந்தனர். குறிப்பாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரராக பார்க்கப்பட்ட மார்னஸ் லபுச்சானே, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பெரிதளவில் செயல்படவில்லை.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 31 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காமல் 29 ரன்கள் என நன்றாக விளையாடினார். இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்களையும் சிறப்பாக எதிர்கொண்டார். இவருக்கு அச்சுறுத்தலாக அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவருமே செயல்பட்டாலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

இதனை சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டு நான்காவது டெஸ்ட் போட்டியிலும் அவர்களை எதிர்கொள்வதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அனைத்தையும் செய்வேன். அச்சுறுத்தலாக இருப்பார்கள் என தெரியவில்லை என்று பேசி இருக்கிறார் மார்னஸ் லபுச்சானே. அவர் கூறியதாவது:

- Advertisement -

“மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் எனக்கு அடுத்த பந்து எப்படி வரும் என்று நினைக்கும் நேரத்தை கூட கொடுக்கவில்லை. பந்தை போட்டு முடித்த அடுத்த நிமிடமே நேராக பின்னே சென்று பாதி தூரத்தில் இருந்து ஓடி வந்து அடுத்த பந்தைவீச ஆரம்பித்தார்கள். ஆகையால் எனக்கு அழுத்தம் சற்று அதிகமாக இருந்தது.”

“இந்த தருணத்தில் பந்தை எதிர்கொள்வதற்கு சற்று கூடுதலான நேரம் எடுத்துக் கொண்டேன். எதைப் பற்றியும் யோசிக்காமல், சிறிது தூரம் நடந்து எப்படி எதிர்கொள்ளலாம் என்று யோசித்தேன். அது எனக்கு உதவியது. ஆகையால் நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இந்த யுக்தியை பயன்படுத்துவேன். இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் அச்சிறுத்தலாக இருப்பார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நிச்சயம் நன்றாக செயல்பட்டு வெற்றி பெறுவோம்.” என்றார்.