இந்தியா, ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரால் எந்த பயனும் இல்லை.. டிவி சேனலுக்காக நடத்தப்படுகிறது.. கவாஸ்கர் விமர்சனம்

0
66

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் வெள்ளைப் பந்து தொடருக்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லை என்றும், இது ஒளிபரப்பு உரிமையாளர்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக மட்டுமே நடத்தப்படுகிறது என்று முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கர், தெரிவித்துள்ளார்.

இந்திய அணி, அக்டோபர் 19 முதல் நவம்பர் 8 வரை நடைபெறும் வெள்ளைப் பந்து சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
பெர்த்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், மழையால் 26 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

- Advertisement -

கவாஸ்கர் விமர்சனம்:

ஒருநாள் உலகக் கோப்பை இன்னும் இரண்டு ஆண்டுகள்  உள்ள நிலையில், நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடர், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர்,  “இந்த வெள்ளைப் பந்து தொடர், ஒளிபரப்பு உரிமையாளர்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக மட்டுமே நடத்தப்படுகிறது. ஒருநாள் மற்றும் டி20 தொடர்களின் முடிவுகள் எந்தவித புள்ளிகளையும் அளிக்காது.  மேலும் புகழ்பெற்ற கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பும் இல்லை” என்று கவாஸ்கர்  குறிப்பிட்டார்.

- Advertisement -

மில்லயன்களை எட்டுகிறது:

“ஒளிபரப்பாளர்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றனர். ஏனெனில் பார்வையாளர்களின் எண்ணிக்கை மில்லியன்களை எட்டுகிறது. அவர்கள் உரிமைகளை வாங்குவதற்கு செலவிடும் பெரும் தொகைகளால், அவர்கள் தங்கள் முதலீட்டை மீட்க முயற்சிக்க வேண்டும். அது அதிக லாபம் தராவிட்டாலும் கூட” என்று கவாஸ்கர் கூறினார்.

இதையும் படிங்க: ரிஷப் பண்ட்க்கு புதிய பொறுப்பு.. தென்னாப்பிரிக்க ஏ தொடருக்கான டெஸ்ட்.. பிசிசிஐ அறிவித்த அணிகள் விவரம்

இந்தியா,ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, அடிலெய்டில் அக்டோபர் 23, வியாழன் அன்று நடைபெறவுள்ளது.
இந்திய அணி, ஒருநாள் போட்டிகளில் பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறது.இந்த ஆஸ்திரேலிய தொடரிலிருந்து சுப்மன் கில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 35 ஓவர்கள் வரை இரண்டு பந்தும் அதன் பிறகு ஒரு பந்தும் பயன்படுத்தும் மாற்றம் அறிமுகமான நிலையில் இந்தியா விளையாடும் முதல் போட்டி இதுவாகும்.

- Advertisement -