ரிஷப் பண்ட்க்கு புதிய பொறுப்பு.. தென்னாப்பிரிக்க ஏ தொடருக்கான டெஸ்ட்.. பிசிசிஐ அறிவித்த அணிகள் விவரம்

0
81

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், பெங்களூருவில் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்கா A அணிக்கு எதிரான இரண்டு நான்கு நாள் போட்டிகளில் இந்திய A அணியை கேப்டனாக வழிநடத்துவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இரு போட்டிகளுக்குமான அணியை பிசிசிஐ அறிவித்தது.

முதல் போட்டியில் வழக்கமான வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள். ரிஷப் பந்த், ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் போது கால் காயமடைந்ததைத் தொடர்ந்து, அதன் பிறகு எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை. சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடந்த இரண்டு டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்கவில்லை.

- Advertisement -

அவருக்கு பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும், டெஸ்ட் அணியில் பந்த் முதன்மை விக்கெட் கீப்பராகவே உள்ளார். சாய் சுதர்சன் இரு போட்டிகளிலும் துணைக் கேப்டனாக செயல்படுவார். கேஎல் ராகுல், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரல், மற்றும் முகமது சிராஜ் ஆகிய டெஸ்ட் வீரர்கள் இரண்டாவது நான்கு நாள் போட்டிக்கு அணியில் இணைவார்கள்.

இந்திய ஏ அணி விவரம்:

முதல் நான்கு நாள் போட்டிக்கான இந்திய A அணி: ரிஷப் பந்த் (கேப்டன்) (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் மாத்ரே, என். ஜகதீசன் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன் (துணைக் கேப்டன்), தேவதத் படிக்கல், ரஜத் படிதார், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியன், மனவ் சுதர், அன்ஷுல் கம்போஜ், யாஷ் தாக்கூர், ஆயுஷ் பதோனி, சரண்ஷ் ஜெயின்.

- Advertisement -

இரண்டாவது நான்கு நாள் போட்டிக்கான இந்திய A அணி: ரிஷப் பந்த் (கேப்டன்) (விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன் (துணைக் கேப்டன்), தேவதத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியன், மனவ் சுதர், கலீல் அகமது, குர்னூர் பிரார், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப். முதல் நான்கு நாள் போட்டி அக்டோபர் 30-ல் தொடங்குகிறது.

தென்னாப்பிரிக்க தொடர் அட்டவணை:

இரண்டாவது போட்டி நவம்பர் 6-ல் தொடங்குகிறது.தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா நவம்பர் 14 முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை நடத்துகிறது. இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளை 2-0 என வீழ்த்தியது. இந்த இரண்டு நான்கு நாள் போட்டிகள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பயிற்சி போட்டிகளாக அமையும்.

இதையும் படிங்க: இந்திய அணி நிர்வாகம் செய்தது அபத்தம்.. ராகுல், நிதிஷ் இருக்கும் போது இதை செய்யலாமா? ஸ்ரீகாந்த் கருத்து

முதல் டெஸ்ட் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 14 முதல் 18 வரை நடைபெறும். இரண்டாவது டெஸ்ட் கவுகாத்தியில் நவம்பர் 22 முதல் 26 வரை நடைபெறும். தற்போது தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானில் இரண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லாகூரில் நடந்த முதல் டெஸ்டில் அவர்கள் 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர்.

- Advertisement -