IND vs AUS.. திடீரென வெளியேறிய இந்திய வேகப்பந்துவீச்சாளர்… சேர்க்கப்பட்ட சிஎஸ்கே வீரர்.. காரணம் என்ன?

0
9784
ICT

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 5 போட்டிகளைக் கொண்ட டி20 போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது .

இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டி20 போட்டி ராய்ப்பூர் நகரில் வருகின்ற ஒன்றாம் தேதி நடைபெற இருக்கிறது முதல் இரண்டு போட்டிகளிலும் கலந்து கொண்ட வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ஆவேஷ் கான் இந்தப் போட்டியில் பங்கு பெற்றார்.

- Advertisement -

முகேஷ் குமாருக்கு திருமணம் நடக்க இருப்பதால் அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தனது திருமணம் நடக்க இருக்கும் நாட்களுக்கு மட்டும் விடுப்பு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிசிசிஐ அவருக்கு மூன்றாவது போட்டியில் இருந்து விடுப்பு வழங்கி இருந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக மாற்று வீரரும் அறிவிக்கப்பட்டிருந்தார்.

முகேஷ் குமாருக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் ஆல் ரவுண்டர் தீபக் சஹார் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். மேலும் அவர் மீதி இருக்கும் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியிலும் இருப்பார் என தேர்வு குழு அறிவித்திருக்கிறது. மேலும் மூன்றாவது போட்டியின் போது விடுப்பில் சென்ற முகேஷ் குமாரும் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் நான்காவது போட்டிக்கு முன்பாக இந்திய அணியுடன் இணைவார் என்றும் இந்திய அணியின் தேர்வு குழு அறிவித்து இருக்கிறது.

கடந்த 2022 ஆம் வருடம் டி20 உலக கோப்பை போட்டிகளுக்கு முன்பாக நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டி தொடரில் காயமடைந்து இந்திய அணியில் இருந்து வெளியேறினார் தீபக் சஹார். அதன் பிறகு காயத்திலிருந்து குணமடைந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வந்த அவர் ஐபிஎல் தொடர்களில் பங்கேற்றார். எனினும் ஐபிஎல் தொடரின் போது மீண்டும் காயம் ஏற்பட்டதால் பாதியிலேயே சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறினார்.

- Advertisement -

உலகக்கோப்பைக்கு முன்பாக காயத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்த அவர் செய்யது அலி முஸ்தாக் டி20 போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக பங்கேற்றார். தற்போது முழு உடல் தகுதியையும் நிரூபித்து இருப்பதால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார் தீபக் சஹார். வேதப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான தீபக் சஹாருக்கு இனி வரும் டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணிக்காக 24 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் தீபக் சஹார் 29 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இவரது சிறந்த பந்துவீச்சு 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றியதாகும். சிஎஸ்கே அணிக்காக 73 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய இவர் 72 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். கடந்த வருட டி20 உலக கோப்பை போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹேம்ஸ்டிரிங் காயத்தால் சில காலம் கிரிக்கெட் விளையாட முடியாமல் போனது.