IND vs AUS.. ஆஸிக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடி சாதனை.. 10 வருட ரெக்கார்ட் பறிபோனது!

0
7133
ICT

இந்திய அணி இன்று மூன்று போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில், இரண்டாவது போட்டியில் இந்தூர் மைதானத்தில் விளையாடி வருகிறது.

இந்த போட்டிக்கான டாசை வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆனால் இதற்காக அவர் வருத்தப்படும்படியான நிகழ்வுகளை இந்திய பேட்ஸ்மேன்கள் செய்தார்கள்.

- Advertisement -

கில் உடன் துவக்க ஆட்டக்காரராக வந்த ருத்ராஜ் 8 ரன்களில் வெளியேறினார். இதற்கு அடுத்து மூன்றாவது வீரராக வந்த ஸ்ரேயாஸ் ஐயர் கில் உடன் சேர்ந்து அருமையான பாட்னர்ஷிப்பை உருவாக்கினார்.

மிகச் சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதங்கள் கடந்து சதம் அடித்தனர். ஸ்ரேயாஸ் 105, கில் 104 ரன்களில் வெளியேறினார்கள். இவர்கள் இருவரும் இருநூறு ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.

இதற்கு அடுத்து உள்ளே வந்த கேஎல்.ராகுல் 38 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷான் 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் ஆட்டத்தில் ரன் ரேட் சரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் மிகச் சரியாக 40 ஓவர்கள் முடிய உள்ளே வந்தார். அதற்குப் பிறகு மைதானத்தில் அனல் பறக்க ஆரம்பித்தது. சூர்யா குமார் யாதவ் கேமரூன் கிரீன் வீசிய ஓவரில் நான்கு சிக்ஸர்கள் தொடர்ந்து விளாசினார்.

களத்தில் தொடர்ந்து நின்று ருத்ரதாண்டவம் ஆடிய சூரியகுமார் யாதவ் 24 பந்துகளில் அரைசதம் அடித்து ரசிகர்களை குதுகலப்படுத்தினார். இறுதிவரை களத்தில் நின்ற சூரிய குமார் யாதவ் 37 பந்துகளில் 72 ரன்கள் அடித்தார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்து இருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி அடித்த அதிகபட்ச ஒருநாள் கிரிக்கெட் ரன் இதுதான். 2013 ஆம் ஆண்டு ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்திருந்த பொழுது 383 ரன்கள் சேர்த்து இருந்ததே சாதனையாக இருந்தது. தற்பொழுது அது உடைக்கப்பட்டு இருக்கிறது!