முதல் டெஸ்டில் 23, 22 ரன்கள்.. இப்போ 10 ரன்கள்; ஐயா கேஎல் ராகுல், உங்க சேவைக்கு நன்றி.. வருத்தெடுத்த ரசிகர்கள்!

0
239

2வது டெஸ்டில் 10 ரன்களுக்கு அவுட்டான கேல் ராகுலை வறுத்தெடுத்த ட்விட்டர் ரசிகர்கள். அவற்றில் சிலவற்றை இங்கே காண்போம்.

டாக்கா மைதானத்தில் நடைபெற்று வரும் வங்கதேசம்-இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மோமினுல் ஹக் 84 ரன்கள் அடித்திருந்தார்.

- Advertisement -

இந்திய பவுலர்கள், உமேஷ் யாதவ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா நான்கு விக்கெட்டுகளையும், உனட்கட் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார். இதனை தொடர்ந்து முதலாவது இன்னிசை விளையாடியது. முதல் நாள் முடிவில் 19 ரன்கள் அடித்திருந்தது.

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் மற்றும் கேப்டன் கே எல் ராகுல் 10 ரன்களுக்கு தஜுல் இஸ்லாம் பந்தில் எல்பிடபிள்யு ஆகினார். முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்கள் முறையே 23 மற்றும் 22 ரன்கள் அடித்து அவுட்டானார்.

இதனால் மோசமான பார்மில் இருக்கிறார் என்கிற விமர்சனங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்த சூழலில் மீண்டும் ஒருமுறை இப்படி சொதப்பலான ஆட்டத்தினால் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகியதால் கடும் விமர்சனங்கள் வந்திருக்கின்றன.

- Advertisement -

அதில், “இவரை ஏன் இன்னும் அணியில் வைத்துள்ளீர்கள், இவரெல்லால் ஐபிஎல் போட்டிகளோடு நிறுத்தவேண்டும், பிசிசிஐ இன்னும் தூங்குகிறதா?, ரஞ்சிக்கோப்பை போட்டியில் ஆடுவதற்கே லாயக்கு இல்லாதவர்!” உள்ளிட்ட கடும் விமர்சனங்கள் ட்விட்டரில் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை கீழே காணலாம்.

மற்றொரு துவக்க வீரர் சுப்மன் கில் 20 ரன்கள் அடித்திருந்தபோது, தஜுல் இஸ்லாம் பந்தில் ஆட்டம் இழக்க, அடுத்து வந்த புஜாரா 24 ரன்களுக்கு அதே தஜுல் இஸ்லாம் பந்தில் அவுட்டானார்.

இந்திய அணி 86 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. உணவு இடைவேளைக்கு பின் மீண்டும் ஆட்டத்தை துவங்கிய விராட் கோலி, 24 ரன்களுக்கு தஸ்கின் அகமது பந்தில் வெளியேறினார். தற்போது 100 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து இந்திய அணி விளையாடி வருகிறது.