ஐஎல்டி டி20 லீக்.. பூரன் அதிரடி.. மும்பை இந்தியன்ஸ் எமிரேட் சாம்பியன்

0
281
MIE

ஐக்கிய அரபு எமிரேட்டில் இன்டர்நேஷனல் டி20 லீக் ஐஎல்டி தொடரின் இரண்டாவது சீசன் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் ஆறு அணிகள் பங்கு பெறுகின்றன. இதில் ஐபிஎல் தொடரை வாங்கி உள்ள லக்னோ, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா அணியின் உரிமையாளர்கள் இந்தத் தொடரிலும் நான்கு அணிகளை வாங்கி இருக்கிறார்கள்.

கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்த தொடரில் முதல் சாம்பியன் பட்டத்தை கல்ப் ஜெயின்ட்ஸ் அணி வென்றது. அப்போது அந்த அணியின் கேப்டனாக இங்கிலாந்தின் ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் பயிற்சியாளராக ஜிம்பாபேவின் ஆண்டி பிளவர் இருந்தனர்.

- Advertisement -

இந்த வருடம் ஐஎல்டி டி20 தொடரின் இறுதிப் போட்டியில் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் எமிரேடு அணியும், சாம் பில்லிங்ஸ் தலைமையிலான துபாய் கேப்பிட்டல்ஸ் இன்று மோதிக்கொண்டன. டாசில் வெற்றி பெற்ற துபாய் கேப்பிட்டல்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் எமிரேட் அணிக்கு துவக்க ஜோடி 6.4 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்தது. முகமது வாசிம் முதல் விக்கெட்டாக 24 பந்தில் மூன்று பவுண்டரிகள் மூன்று சிக்ஸர்கள் உடன் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். இன்னும் ஒரு துவக்க ஆட்டக்காரர் குசால் பெரேரா 26 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இவர்களுக்கு அடுத்து மூன்றாவதாக வந்த பெஸ்ட் இன்டிசை சேர்ந்த ஆண்ட்ரூ ப்ளட்சர் 37 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு கேப்டன் நிக்கோலஸ் பூரன் ஆட்டம் இழக்காமல் 27 பந்தில் 2 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் உடன் 57ரன்கள், பொல்லார்ட் 7 பந்தில் 9 ரன் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு மும்பை இந்தியன்ஸ் எமிரேட் 208 ரன்கள் குறித்தது.

- Advertisement -

பெரிய இலக்கை நோக்கி விளையாட வந்த துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் பிளாய் 0, டாம் பாண்ட் 35 ரன்கள் எடுத்தார்கள். அடுத்து அபெல் 14, சிக்கந்தர் ராஸா 10, கேப்டன் சாம் பில்லிங்ஸ் 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதையும் படிங்க : SLvsAFG.. 12 பந்து 14 ரன்.. சிஎஸ்கே பதிரனா 153கி.மீ.. மாஸ் திரில் போட்டியின் எதிர்பாராத முடிவு

இதற்கடுத்து ரோமன் பவல் 8, ஜேசன் ஹோல்டர் 28, குக்லின் 19 ரன்கள் எடுக்க, துபாய் கேப்பிட்டல் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மும்பை இந்தியன்ஸ் எமிரேட் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஐஎல்டி இரண்டாவது சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறது!