9 டி20 உலக கோப்பைகளாக மாறாத 2 அதிசய சோகம்.. இந்தியா தெ.ஆ அணிகளுக்கு ஏற்பட்ட கலக்கம்.. சுவாரசிய விஷயங்கள்

0
907
T20iwc2024

நடப்பு 9வது டி20 உலகக்கோப்பை தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என 20 நாடுகள் நடத்தி வருகின்றன. முதல் சுற்றின் பாதி போட்டிகள் அமெரிக்காவில் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள மொத்த போட்டிகளும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஒட்டுமொத்த டி20 உலகக்கோப்பை வரலாற்றில் தொடரும் இரண்டு அதிசய சோகங்கள் தற்பொழுது சில அணிகளுக்கு கலக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.நடப்பு 9வது டி20 உலகக்கோப்பை தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என 20 நாடுகள் நடத்தி வருகின்றன. முதல் சுற்றின் பாதி போட்டிகள் அமெரிக்காவில் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள மொத்த போட்டிகளும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஒட்டுமொத்த டி20 உலகக்கோப்பை வரலாற்றில் தொடரும் இரண்டு அதிசய சோகங்கள் தற்பொழுது சில அணிகளுக்கு கலக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.

இன்றைய டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் இரு நாடுகளில் ஒரு நாடான அமெரிக்கா ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை எட்ட முடியாமல் வெளியேறிவிட்டது. அந்த அணி லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று காலிறுதிப் போன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி, தொடரை நடத்தும் இன்னொரு அணியான வெஸ்ட் இண்டீஸ் அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது.

இதுவரையிலான ஒட்டுமொத்த ஒன்பது டி20 உலகக்கோப்பை தொடர்களிலும், உலகக் கோப்பை தொடரை நடத்தும் அணிகள் கோப்பையை வென்றது கிடையாது. இந்த சோகமான விஷயம் இந்த டி20 உலகக் கோப்பை தொடரிலும் தொடர்ந்திருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா என தொடரை நடத்தும் இரு நாடுகளும் வெளியேறிவிட்டன.

மேலும் கடந்த 8 டி20 உலகக்கோப்பை தொடரிலும் ஒரு போட்டியை தோற்ற அணிகள்தான் தொடரை வென்றிருக்கின்றன. தோல்வி அடையாமல் தொடர்ந்து வந்த அணிகளால் டி20 உலகக்கோப்பையை இதுவரையில் வெல்ல முடிந்தது இல்லை. இப்படி ஒரு இரண்டு அதிசய சோகமான விஷயங்கள் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இருந்து வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் சுற்றில் நான்கு போட்டிகள், சூப்பர் 8 சுற்றில் மூன்று போட்டிகள் என தொடர்ந்து ஏழு போட்டிகளை வென்று இருக்கிறது. இதே போல இந்திய அணி முதல் சுற்றில் மூன்று போட்டிகள், ஒரு டிரா, சூப்பர் 8 சுற்றில் இரண்டு போட்டியில் என இதுவரையில் வென்றிருக்கிறது. இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற்றால் இந்திய அணி தோல்வி அடையாமல் இருக்கும்.

இதையும் படிங்க : வெ.இ கூட ஜெயிச்சது நிம்மதி.. ஆனா இனி இந்த தப்ப செஞ்சா எங்க கதை முடிஞ்சது – எய்டன் மார்க்ரம் பேட்டி

எனவே ஒரு போட்டியை கூட தோற்காத அணிகள் கோப்பையை வென்றதில்லை என்கின்ற சுவாரசியமான விஷயம், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணி ரசிகர்களுக்கு ஒரு கலக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. ஆனால் இந்த விஷயங்களை முறியடித்து இரண்டில் ஒரு அணி கோப்பையை வெல்லுமா? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.