நேத்து போட்டியில பெரிய ஒரு தப்பு பண்ணிட்டேன்.. இந்தளவுக்கு அது மாறும்னு நினைக்கல – ஜோஸ் பட்லர் ஒப்புதல்

0
1332
Buttler

நேற்று டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இரண்டாவது அரையிறுதி போட்டியில் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. நேற்றைய போட்டியில் கண்டிஷனை கணிக்காமல் ஒரு தவறு செய்து விட்டதாக இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் இந்திய அணி டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்தது. ஆடுகளத்தில் பந்து பல நேரங்களில் தாழ்வாக சென்றது சில நேரங்களில் எகிறியது. மேலும் பந்து திரும்பவும் செய்தது. இதனால் பேட்டிங் செய்வது கடினமான ஒன்றாகவே இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சூரியகுமார் யாதவ் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணியை 150 ரன்கள் இன்னும் இடத்திலிருந்து 171 ரன்களுக்கு கொண்டு வந்தார்கள். அவர்கள் பேட்டிங் ஏற்படுத்திய வித்தியாசம்தான் போட்டியில் ஏற்பட்ட வித்தியாசமாக இருந்தது.

இதற்கு அடுத்து இந்திய அணியின் பந்துவீச்சில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மூன்று சுழல் பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்தி இங்கிலாந்து அணியை திணறடித்தார். இதில் அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் இங்கிலாந்தின் ஆறு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் 3 ஸ்பின்னர்கள் இருந்தபொழுதும் இரண்டு ஸ்பின்னர்களை மட்டுமே பயன்படுத்தினார். மொயின் அலியை பந்துவீச்சுக்க கொண்டு வரவில்லை.

இதுகுறித்து தற்போது பேசிய ஜோஸ் பட்லர் ” வெளிப்படையாக இந்திய அணிக்கு சிறப்பான சுழல் பந்துவீச்சாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். எங்களுடைய இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களும் சிறப்பாகவே பந்துவீசினார்கள். மழையின் காரணமாக ஆடுகளம் இந்த அளவுக்கு மாறும் என்று நான் நினைக்கவில்லை. இதன் காரணமாக நான் மொயின் அலியை பந்து வீச்சுக்கு கொண்டு வரவில்லை. ஆனால் நேற்று அவரை நான் பந்து வீச வைத்திருக்க வேண்டும். ஆனால் போட்டியில் டாஸ் வித்தியாசத்தை ஏற்படுத்தியதாக நான் நினைக்கவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : 292 ரன்.. மந்தனா-செபாலி 90 வருட பெண்கள் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை.. கடைசி 4ல் மூன்று சதம்

எங்களுக்கு பவர் பிளேவில் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை, சில க்ளோஸ்-கால்கள் இருந்தது. ஆனால் போட்டியில் பின்னோக்கிப் பார்த்தால் மொயின் அலி பந்து வீசி இருக்க வேண்டும். அதே சமயத்தில் இந்திய அணி வெற்றிக்கு மிகவும் தகுதியான அணி. நான் இந்த ஆடுகளத்தில் 150 ரன்கள் எதிர்பார்த்து இருந்தேன். ஆனால் அவர்கள் பார்-ஸ்கோரை விட அதிகம் எடுத்தார்கள்” என்று கூறியிருக்கிறார்.