இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் எல்எஸ்ஜி வீரர் முகமது ஷமி அபாரமான பந்து வீச்சில் அனைவரையும் திரும்ப பார்க்க வைத்திருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற எல்எஸ்ஜி கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரடி வீரர்களால் நிரம்பியது என்பதால் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் முதல் ஓவரை வீசிய முகமது ஷமி அந்த ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் சர்மாவை ஸ்லிப்பில் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் டிராவிஸ் ஹெட் விக்கெட்டையும் கைப்பற்றி அனுப்பி வைத்தார்.
இந்த போட்டியில் மொத்தம் நான்கு ஓவர்கள் பந்து வீசி அவர் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து முக்கிய இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆரம்பத்திலேயே பெரிய அழுத்தம் உருவாக பவர் பிளேவில் 26 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த போட்டிக்கு ஆடுகளம் முதலில் கொஞ்சம் மெதுவாக இருந்தது. மேலும் பந்து கொஞ்சம் ஸ்விங் ஆனது. இதைப் பார்த்த முகமது ஷமி பந்தில் வேகம் கொடுத்தால் பேட்ஸ்மேன்கள் எளிதாக அடிப்பார்கள் என எடுத்ததுமே மெதுவான வீசினார். இதனால் அடுத்தடுத்த இரண்டு மெதுவான பந்துகளில் அபிஷேக் ஷர்மா மற்றும் ஹெட் இருவரும் ஆட்டம் இழந்தார்கள்.
இதையும் படிங்க : என் இதயம் சிஎஸ்கேவுக்கு தான்.. இத சொல்ல அவமானப்படல.. ஆனா ஆர்சிபி அதை செய்யும் – அஸ்வின் உருக்கம்
இதுவரை இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இரண்டு போட்டிகளிலும் முகமது ஷமி அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருக்கிறார். உள்நாட்டுப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனாலும் கம்பீர் மற்றும் அகர்கர் இருவரும் இந்திய அணியில் விளையாட இவருக்கு வாய்ப்பு தர மறுத்து வருகிறார்கள். இது குறித்து சமீபத்தில் அவரே வெளிப்படையாக தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது