இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சிஎஸ்கே அணி ஆர்சிபி அணியை எதிர்த்து விளையாடி இருக்கிறது. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பைத் தெரிவித்திருக்கிறார்.
மேலும் சிஎஸ்கே அணி கடந்த இரண்டு போட்டிகளாக அணி தேர்வில் எப்படியான தவறுகளை செய்து வருகிறது? என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார். அவருடைய பேச்சு மிகவும் உருக்கமான முறையில் அமைந்திருக்கிறது.
இதயம் சிஎஸ்கேவுக்கு…
இப்போது சிஎஸ்கே அணி இருக்கும் நிலைமையில் ஆர்சிபி அணியுடன் ஒப்பிடும்பொழுது பலவீனமாக உள்ளது. நடப்புச் சாம்பியனாக விளங்கும் ஆர்சிபி அணி எல்லா துறைகளிலும் பலம் வாய்ந்ததாக உள்ளது. எளிதாக சிஎஸ்கே அணியை வீழ்த்தும் அளவுக்கு இருக்கிறார்கள்.
இதுகுறித்து அஸ்வின் பேசும்பொழுது “நான் ஆர்சிபி அணியை எப்போதும் அபாரமான வெற்றி வாய்ப்பு கொண்ட அணியாக இருக்கிறார்கள் என்று சொல்ல மாட்டேன். என் இதயம் எப்போதும் சிஎஸ்கே அணிக்காக துடிக்கும். இதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை. இந்த ஆட்டத்தில் என் இதயம் சிஎஸ்கே என்று சொல்கிறது; ஆனால் மூளை ஆர்சிபி என்று சொல்கிறது”
இதற்கு அவமானப்படவில்லை
“சிஎஸ்கே விளையாடிய முதல் ஆட்டம் குறித்து ஒரு பயிற்சியாளரின் கண்ணோட்டத்தில் சொல்கிறேன். ராஜஸ்தான் அணிக்கு எதிராக 127 ரன்னில் சிஎஸ்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அன்று மேகமூட்டமாக இருந்ததால் ஆடுகளம் மூடி வைக்கப்பட்டு இருந்தது. இப்படிப்பட்ட ஒரு கண்டிஷனுக்கு அப்படிப்பட்ட ஒரு காம்பினேசனை கொண்டு வந்தது தவறு”
இதையும் படிங்க : சிஎஸ்கே கையில் இருக்கும் பெஸ்ட் பிளேயிங் XI இதுதான்.. ஆர்சிபியை அடிக்க முடியும்.. 28 கோடியை பத்தி கவலைப்படாதீங்க – முழு அலசல்
“சரி இதெல்லாம் டி20 கிரிக்கெட்டில் நடப்பதுதான். ஆனால் ஒரு தோல்விக்காக நீங்கள் அடுத்த போட்டியில் இரண்டு மாற்றங்களை செய்வீர்களா? இப்படி ஒரு தோல்விக்கு இரண்டு மாற்றம் செய்தால், இரண்டாவது தோல்விக்கு நீங்கள் எத்தனை மாற்றங்களை செய்வீர்கள்?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.






