“இந்திய அணியில் இவர் பேட்டிங் முன்னாடி கோலி ரோஹித் எல்லாரும் பின்னாடிதான்!” – ஹர்பஜன் சிங் அதிரடியான பேட்டி!

0
1901
Harbhajan

இந்தியாவில் இந்த முறை ஒருநாள் கிரிக்கெட் தொடர் முழுமையாக நடத்தப்பட இருக்கிறது. இதற்கான எல்லா தயாரிப்புகளும் ஐசிசி மற்றும் பிசிசிஐ என இரு தரப்புகளாலும் மும்முரமாக செய்யப்பட்டு இருக்கின்றன!

இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே குஜராத் அகமதாபாத் மைதானத்தில் துவங்கும் போட்டியின் மூலமாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. நவம்பர் 19ஆம் தேதி முடிவுக்கு வருகிறது!

- Advertisement -

சில நாட்களுக்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ஆசியக் கோப்பையில் அறிவிக்கப்பட்ட 17 பேர் கொண்ட அணியில் இருந்து 15 பேர் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்கள்.

அணிக்கு வெளியே இருந்த அஸ்வின், சாகல் போன்ற அனுபவ வீரர்கள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. மேலும் ஆசிய கோப்பைக்கு பேக்கப் வீரராக தேர்வு செய்யப்பட்ட சஞ்சு சாம்சன் சூரியகுமார் இடத்தில் இடம் பெறுவாரா? என்கின்ற ஒரு கேள்வி இருந்தது. ஆனால் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு அதற்கு இல்லை என்று பதில் அளித்து இருக்கிறது!

இந்த நிலையில் சூரியகுமார் தேர்வு பற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறுகையில் “சூரியகுமார் யாதவ் ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ் என்று நான் உணர்கிறேன். மேலும் சஞ்சு சாம்சனை புறக்கணித்து இவருக்கு வாய்ப்பு தரப்பட்டது குறித்து இந்தியத் தேர்வுக்குழு தவறிழைத்ததாக நான் நினைக்கவில்லை. சஞ்சுவை விட சூரியகுமார் சிறந்த ஆட்டத்தைக் கொண்டு உள்ளார். அவரால் யாரையும் விட பெரிய ஸ்கோரை கொண்டு வர முடியும்.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட்டில் சூர்யா உடைய புள்ளிவிபரங்களை பற்றி மக்கள் பேசுகிறார்கள். ஆனால் டி20 கிரிக்கெட்டில் அவர் என்ன செய்துள்ளார்? என்று பார்க்க வேண்டும். மேலும் 50 ஓவர் கிரிக்கெட்டில் அதிக பந்துகள் மீதமுள்ள நிலையில் அவர் வந்தால், அவரை விட சிறந்த பேட்ஸ்மேன் யாரும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

இந்திய அணி பேட்டிங்கில் ரோகித் மற்றும் விராட் கோலியையே அதிகம் சார்ந்து இருக்கும். காரணம் இப்பொழுதுதான் ஸ்ரேயாஸ் காயத்தில் இருந்து திரும்ப வருகிறார். மேலும் கே எல் ராகுல் விளையாடுவாரா இல்லை என்று நமக்குத் தெரியாது. விராட் ரோஹித் போல ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் ஒரு முக்கிய வீரராக இருப்பார்.

ஆனாலும் சூரியகுமார் யாதவ் பேட்டிங் செய்யும் விதத்திற்கு, இந்திய அணியில் விராட் கோலி ரோஹித் சர்மா யாராலும் செய்ய முடியாது. அவரால் மாற்றத்தை ஏற்படுத்தும் தாக்கத்தை தரக்கூடிய இன்னிங்ஸ் விளையாட முடியும். நான் அவருக்கு ஐந்து, ஆறாம் இடத்தில் இடம் தருவேன்!” என்று கூறியிருக்கிறார்!