நான்காவது டெஸ்டில் நாங்கள் பழைய ஆயுதத்தை மீண்டும் கையில் எடுக்கலாம் – அலெக்ஸ் ஹேரி எச்சரிக்கை!

0
1087
Alex Carey

இப்ப வித்தியாசமான நடவடிக்கைகள் அவதூறுகள் எல்லாவற்றையும் தாண்டி தூண்டி நடப்பு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ததில் இந்த முறை போல் எப்பொழுதும் சர்ச்சைகள் இருந்ததில்லை!

ஆஸ்திரேலியா இந்தியாவில் பயிற்சி போட்டிகள் விளையாடுவதில்லை என்று முடிவு செய்து, தங்கள் உள்நாட்டிலேயே சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்து பயிற்சி எடுத்தது. மேலும் இந்தியா வந்து பெங்களூர் ஒட்டி உள்ள ஒரு மைதானத்தில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை தயார் செய்து வாங்கி, அத்தோடு இல்லாமல் இந்திய சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினை போல் பந்து வீசக்கூடியவரை கொண்டு பயிற்சி செய்தது.

- Advertisement -

இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள், ஊடகங்கள், ரசிகர்கள் இந்திய அணி நிர்வாகம் ஆடுகளங்கள் தயார் செய்வது குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துக் கொண்டு இருந்தார்கள். மேலும் முதல் டெஸ்ட் போட்டி நடந்த நாக்பூர் ஆடுகளத்தின் புகைப்படம் வெளியாக, அந்த ஆடுகளம் குறித்து போட்டிக்கு முன்பாகவே ஐசிசி தலையிட வேண்டும் என்று ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் வேண்டுகோளெல்லாம் வைத்தார்கள்.

இந்த நிலையில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று வலிமையான முன்னிலையைப் பெற்று இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக மூன்றாவது போட்டியில் திரும்பி வந்த ஆஸ்திரேலியா அந்த போட்டியை வென்று, தொடரை சமன் செய்யும் வாய்ப்பை பெற்றதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது. அதே சமயத்தில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற அகமதாபாத்தில் மார்ச் ஒன்பதாம் தேதி நடைபெற இருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியை டிரா செய்ய வேண்டும் இல்லை வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் பேசி உள்ள ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் அலெக்ஸ் ஹேரி ” மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரில் நாங்கள் இரு முறை ரோகித் சர்மாவுக்கு அப்பில் கேட்காமல் தப்பிக்க விட்டோம். மைதானத்தின் பெரிய திரையில் பந்து அவரது பேட்டில் பட்டது தெரிந்த பொழுது, இதன் மூலம் அவர் நிலைத்து நின்று 150 ரண்களுக்கு மேல் அடிக்கப் போகிறார் என்று நான் நினைத்தேன். ஆனால் முதல் நாள் முதல் செஷன் போதே பந்து எட்டு டிகிரி அளவுக்கு திரும்பியது எதிர்பார்க்காத ஒரு முடிவை கொண்டு வந்து விட்டது. எங்களுக்கு போட்டியின் ஆரம்பத்தில் கிடைத்த ஒரு மொமன்டத்தை நாங்கள் அப்படியே பிடித்து மேலே வந்தோம்!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” நான் முதல் டெஸ்ட் போட்டியின் போது எனது வழியில் ஸ்வீப் ஷாட் விளையாடி ரண்களைக் கொண்டு வந்திருந்தேன். ஆனால் அதற்குப் பிறகு நான் தடுப்பாட்டம் விளையாட போய்தான் ஆட்டம் இழந்தேன். நாம் எப்பொழுதும் நம்முடைய முறையில் இயல்பில் விளையாட வேண்டும். அதை விட்டு வேறு ஒன்றை துரத்தும் பொழுது நாம் பிரச்சனைகளை சந்திப்போம். எங்கள் அணியின் வீரர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடக் கூடியவர். ஹேண்ட்ஸ்ஹோம் அழகாக விளையாடி ரன்களை எடுத்து வருவார். ஸ்மித் மிகச் சிறப்பாக விளையாடக்கூடியவர். நாங்கள் மூன்றாவது போட்டியில் கையில் எடுக்காத ஸ்வீப் ஷாட்டை நான்காவது ஆட்டத்தில் கையில் எடுக்கலாம்!” என்று எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசியிருக்கிறார்!