இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி வித்தியாசமான பேட்டிங் ஸ்டான்ஸ் எடுத்து விளையாடினார். இருந்த போதும் அவர் 5 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்தது.
பேட்டிங் டெக்னிக்கில் தவறு செய்த இந்திய அணி
இன்றைய போட்டியில் ஜெய் ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமல் வெளியில் சென்ற பந்தை ஆடச் சென்று ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வந்த படிக்கள் அட்வான்ஸ் ரன் புட் வைத்து ஆட முடியாமல் லாக் ஆகி விக்கெட் கொடுத்து ஆட்டம் இழந்தார். இவர்கள் இருவரும் வெளிப்படுத்திய பேட்டிங் டெக்னிக் மிகவும் மோசமாக இருந்தது.
இந்த நிலையில் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய கேஎல் ராகுல் ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என எல்லோருக்கும் பாடம் நடத்தினார். இதைத்தொடர்ந்து பலரது எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆஸ்திரேலிய மண்ணில் கடைசி டெஸ்ட் தொடரை விளையாடும் விராட் கோலி உள்ளே வந்தார்.
விராட் கோலி கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறை
இன்று விளையாட வந்த விராட் கோலி ஸ்டெம்பில் இருந்து கிரீசை விட்டு வெளியில் வந்து நின்றார். மேலும் விளையாடும் பொழுது ஆப் டெம்பிள் வந்து விளையாடினார். அவரை வெளியில் பந்துவீசி ஆட்டமிழக்க வைக்க முயற்சி செய்வார்கள் என, அதை பயன்படுத்தி ரன்கள் எடுக்க விராட் கோலி இதைச் செய்தார். மேலும் முன்னே வந்து நிற்பதால் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் லென்த்தை உடைப்பதற்கு முயற்சி செய்தார்.
இதையும் படிங்க: முதல் டெஸ்ட்.. அஸ்வின் ஜடேஜா ஏன் இல்லை.. கம்பீர் பும்ரா முடிவுக்கு காரணம் என்ன?.. வெளியான முக்கிய காரணம்
இந்த நிலையில் இன்று அவர் ஒரு பந்தை ஸ்டெம்பில் இருந்து 2.685 மீட்டர் தூரத்தில் சந்தித்து விளையாடினார். இன்றைய போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களில் மிக அதிக தூரத்தில் பந்தை சந்தித்த வீரராக விராட் கோலி இருந்தார். மேலும் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இவ்வளவு தூரத்தில் பந்தை சந்தித்து அவர் விளையாடியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இருந்த போதும் அவருடைய இந்த டெக்னிக் இன்று பலன் அளிக்காது சோகமாக வெளியேறினார்!






