முதல் டெஸ்ட்.. அஸ்வின் ஜடேஜா ஏன் இல்லை.. கம்பீர் பும்ரா முடிவுக்கு காரணம் என்ன?.. வெளியான முக்கிய காரணம்

0
332
Jadeja

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தொடங்கியுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறாததற்கான காரணங்கள் குறித்து கிரிக்கெட் வல்லுனர்கள் பேசியிருக்கிறார்கள்.

இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று வருத்த மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

- Advertisement -

பும்ரா-கம்பீர் ஆச்சரிய முடிவு

இன்று இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இந்திய அணியின் அனுபவ சுழல் பந்துவீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இடம் பெறவில்லை. ஒரே ஒரு ஸ்பின்னராக வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றார். மேலும் நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித்ராணா இருவரும் அறிமுகமானார்கள். இத்துடன் பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் பவுலிங் யூனிட்டில் இருக்கிறார்கள்.

மேலும் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் கேஎல்.ராகுல், ஜெய்ஷ்வால், படிக்கல், விராட் கோலி, ரிஷப் பண்ட் ஜுரல் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் இந்த பிளேயிங் லெவன் நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவே தெரிகிறது.

- Advertisement -

அஸ்வின் ஜடேஜா இல்லாத காரணம்

இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் இடதுகை பேட்ஸ்மேன்களாக மேல் வரிசையில் ஜெய்ஸ்வால் மற்றும் படிக்கல் இருவர் இருக்கிறார்கள். கீழ் வரிசையில் ரிஷப் பண்ட் மட்டுமே இருக்கிறார். இன்னொரு இடதுகை பேட்ஸ்மேன் தேவையாக இருக்கிறது. அந்த இடத்திற்கு ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்யலாம், ஆனால் அவர் இடதுகை சுழல் பந்துவீச்சாளராக இருக்கிறார்.

இதையும் படிங்க : பங்களாதேஷ் டெஸ்ட்.. வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் XI அறிவிப்பு.. ஆச்சரிய பவுலிங் யூனிட்.. அதிரடி முடிவு

இந்த நிலையில் இந்திய அணிக்கு இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் ஆஸ்திரேலியா இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசும் ஆப் ஸ்பின் பவுலர் தேவையாக இருக்கிறார். இதன் காரணத்தால் தான் அனுபவ ஆப் ஸ்பின்னர் வலதுகை பேட்மேன் அஸ்வினை தாண்டி இடதுகை பேட்டிங் மற்றும் வலது கை ஆப் ஸ்பின் பவுலர் வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கிடைத்திருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -