உலககோப்பையை விட ஐபிஎல் கோப்பை ஜெயிப்பது தான் கடினம்; ரோகித் 5 கோப்பை வென்றுள்ளார் அவர் தான் பெஸ்ட் கேப்டன் – மீண்டும் விராட்கோலி-ரோகித் சண்டையை தூண்டிவிடும் கங்குலி!

0
697

உலககோப்பையை விட ஐபிஎல் கோப்பை வெல்வது தான் கடினம். ரோகித் சர்மா ஐந்து முறை வென்றுள்ளார். அவர்தான் சிறந்த கேப்டன் என்று நியமித்தோம் என ரோகித் சர்மா நியமிக்கப்பட்ட வரலாறு குறித்து சமீபத்திய பேட்டியில் பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார் கங்குலி.

சௌரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்த போது விராட் கோலி அனைத்துவித கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். அப்போது இருவருக்கும் இடையே பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. கடைசியில் சௌரவ் கங்குலி கொடுத்த அழுத்தத்தினால் தான் விராட் கோலி தனது கேப்டன் பொறுப்பை விட்டு வெளியேறினார் என்கிற விவரங்கள் தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா ரகசியமாக பேசிய வீடியோவில் பதிவாகி உலகுக்கே தெரியவந்தது.

- Advertisement -

அதன் பிறகு சமீபத்தில் பேட்டியில் கங்குலி கூறுகையில், “நிச்சயமாக விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கவில்லை. நாங்கள் அதற்கு தயராகவும் இல்லை. குறிப்பாக தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு பிறகு டெஸ்ட் கேப்டனிலிருந்தும் விலகுவார் என்று தெரியவில்லை. அதன் பிறகு தேடி பார்த்ததில் ரோகித் சர்மா சிறந்த ஆப்ஷனாக இருப்பார் என்று அவரை நியமித்தோம்.” என மீண்டும் விராட் கோலி விலகியதற்கு தான் காரணம் இல்லை என்று கங்குலி விடாப்படியாக சாதித்தார்.

2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெறுவதற்கு முன்பே, “இதுதான் டி20 கேப்டனாக நான் பொறுப்பேற்று விளையாடும் கடைசி தொடர். இது முடித்த பிறகு டி20 கேப்டனிலிருந்து விலகுகிறேன்.” என்று மட்டுமே விராட் கோலி சொல்லியிருந்தார். டி20 உலக கோப்பை முடிந்த பிறகு தென் ஆப்பிரிக்கா தொடர் நடைபெற்றது. அதன் பிறகு ஒட்டுமொத்த கேப்டன் பொறுப்பில் இருந்தும் விராட் கோலி விலகுவதாக அறிவித்தது பேரதிர்ச்சியை கிளப்பியது. இது பலரும் அறிந்த உண்மை.

ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி டி20 உலககோப்பையில் அரையிறுதி போட்டியுடன் வெளியேறியது. ஆசிய கோப்பையையும் இழந்தது. பின்னர் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலிலும் தோல்வியை தழுவி இருக்கிறது.

- Advertisement -

இப்போது ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பு குறித்து பேசிய கங்குலி கூறுகையில், “நாங்கள் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு இந்திய அணியில் பார்க்கையில் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்ட அனைத்து தருணங்களிலும் வெற்றிகரமாக வழி நடத்தி இருந்தார். நியமித்தோம். அதன்பின் ஆசிய கோப்பையிலும் நன்றாக வழிநடத்தி இருந்தார்.

பின்னர் டி20 உலககோப்பையில் அவர் நன்றாக செயல்படவில்லை என்றாலும் இந்திய அணி செமி பைனல் வரை வந்தது. அதற்கு முந்தைய டி20 உலககோப்பையில்(2021) நாக்கவுட் சுற்றுகூட வரவில்லை. இதிலிருந்து நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலிலும் தோல்வியை தழுவி இருந்தாலும் ரோகித் சர்மா சிறந்த கேப்டன் என்று கூறுவேன். விராட் கோலிக்கு அடுத்தபடியாக இவர் தான் சரியான ஆப்ஷனாக இருப்பார் என்று உணர்ந்தேன். ஏனெனில் உலகக் கோப்பையை வெல்வதைவிட ஐபிஎல் கோப்பைகளை வெல்வது கடினம். அதை ரோகித் சர்மா ஐந்து முறை செய்திருக்கிறார். ஏனெனில் 14 போட்டிகள் விளையாடிய பிறகே எந்த அணியாலும் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். மொத்தமாக 17 போட்டிகள் முடிந்த பிறகு கோப்பையை வெல்ல முடியும். அதை இத்தனை முறை செய்திருப்பது எளிதல்ல. இதிலிருந்து உணர வேண்டும் ரோகித் சர்மா சிறந்த கேப்டன் என்று. ஆகையால் நியமித்தோம்.” என்றார்.