தற்போது நடைபெற்று வரும் துலீப் டிராபியில் முஷீர் கானின் பெரிய சதத்தால் இந்திய பி அணி மீண்டிருக்கிறது. அதே சமயத்தில் இந்திய ஏ அணி 187 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. எனவே இந்த இரு அணிகள் மோதும் போட்டி சுவாரசியமான கட்டத்தை எட்டி இருக்கிறது.
இந்த போட்டிக்கான தாசில் வெற்றி பெற்ற இந்திய ஏ அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்தார். ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்த காரணத்தினால் இந்திய பி அணி 94 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியான நிலையில் சிக்கியது.
மீட்ட முஷீர் கான் மற்றும் நவ்தீப் ஷைனி
இந்த நிலையில் எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த முஷீர் கான் மற்றும் நவ்தீப் ஷைனி இருவரும் சேர்ந்து 43 பந்துகளில் 205 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். இதில் 75 சதவீத ரன்களை முஷீர் கான் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எட்டாவது விக்கெட்டுக்கு துலீப் டிராபியில் இதுவே மிக அதிகபட்ச பார்ட்னர்ஷிப் என்பதும் குறிப்பிடத்தக்கது. இறுதியாக முஷீர் கான் 181 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். துலீப் டிராபி அறிமுகப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 159 ரன்கள் எடுத்திருந்ததை தாண்டி முஷீர் கான் சாதனை படைத்தார்.
மேலும் இவருடன் இணைந்து விளையாடிய நவ்தீப் ஷைனி 53 ரன்கள் எடுத்தார். இந்திய பி அணி இறுதியாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 321 ரன்கள் சேர்த்தது. இந்திய ஏ அணியின் பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
ஏமாற்றிய கேப்டன் கில்
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய ஏ அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த மயங்க் அகர்வால் 45 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். கேப்டன் கில் நவ்தீப் ஷைனி வீசிய பந்து வெளியே செல்வதாக நினைத்துவிட அந்த பந்து ஸ்டெம்பை தாக்க, பரிதாபமாக 25 ரன்களில் வெளியேறினார். அதே சமயத்தில் இன்று அவர் ஆட்டத்தை சிறப்பான முறையில் துவங்கி அருமையான ஷாட்கள் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 206-8.. திடீரென மாஸ் திட்டம் போட்ட ஸ்ரேயாஸ் படிக்கல்.. சிக்கிய ருதுராஜ் அணி ?.. துலீப் டிராபி 2024
இதைத்தொடர்ந்து கேஎல்.ராகுல் 23, ரியான் பராக் 27 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்து இரண்டாம் நாள் முடிவில் மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பாதுகாப்பாக முடித்தார்கள். இந்திய ஏ அணி இரண்டாம் நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து 187 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. ஆடுகளம் கொஞ்சம் கொஞ்சமாக பேட்டிங் செய்ய சாதகமாக மாறுகிறது!