ஜடேஜா இல்லை, அந்த இடத்தில் இந்த வீரருக்கு டி20 உலகக்கோப்பை பிளேயிங் லெவனில் இடம் உறுதி – முன்னாள் தேர்வுக்குழு தலைவர் பேட்டி!

0
579

டி20 உலக கோப்பை செல்லும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இவருக்கு நிரந்தர இடம் உண்டு என்று முன்னாள் தேர்வு குழு அதிகாரி சபா கரிம் பேட்டியளித்துள்ளார்.

டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணியுடன் டி20 தொடரில் விளையாடுகிறது. தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் நடைபெற்ற வருகிறது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் தலா ஒரு வெற்றியுடன் சமனில் இருக்கிறது.

இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் பந்துவீச்சு சற்று கேள்விக்குறியாக இருந்தாலும், ஒருவர் மட்டும் மிகச் சிறப்பாக பந்துவீசி எதிரணிக்கு அச்சுறுத்தலாகவே இருந்தார். அவர் வேறு எவரும் இல்லை அக்சர் பட்டேல். ஜடேஜாவின் இடத்திற்கு உள்ளே வந்த அவர், தற்போது ஜடேஜாவை மிஞ்சும் அளவிற்கு செயல்படுகிறார்.

முதல் டி20 போட்டியில் இரு அணிகளும் 200 ரன்களுக்கும் மேல் அடித்தது. ஆனால் அக்சர் பட்டேல் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இரண்டாவது போட்டியில்(8 ஓவர் ஆட்டம்) இரண்டு ஓவர்களுக்கு வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்ற பந்துவீச்சாளர்கள் எக்கனாமி 10க்கும் அதிகமாக இருந்த போது, இவர் மட்டும் மிக குறைவாக வைத்திருந்தார். மேலும் விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார்.

நல்ல பார்மில் இருக்கும் அக்ஸர் பட்டேலுக்கு டி20 உலக கோப்பை தொடரிலும் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜடேஜா காயம் காரணமாக வெளியேறியதால், அவரது இடத்தில் உள்ளே எடுத்து வரப்பட்டிருக்கிறார். சமீபத்தில் நல்ல பங்களிப்பை கொடுத்து வருகிறார். இதனை குறிப்பிட்டு பேசிய இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு அதிகாரி சபா கரீம், பேட்டியில் கூறுகையில்,

“டி20 உலக கோப்பையில் அக்சர் பட்டேலுக்கு இடம் உறுதியாகிவிட்டது. அந்த அளவிற்கு தனது அனுபவத்தையும் திறமையையும் வெளிப்படுத்தி பந்துவீசி வருகிறார். தொடர்ச்சியாக பெரிய போட்டிகளில் நல்ல பங்களிப்பை கொடுத்து வருகிறார். ஒரு வீரருக்கு மாற்று வீரராக உள்ளே வந்து தனது செயல்பாட்டின் மூலமாக கால் பதித்திருப்பது மிகுந்த நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. வரும் போட்டிகளில் அவருக்கென்று நிச்சயம் தனி இடம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. உலகக்கோப்பை பிளேயிங் லெவனில் இவர் நிச்சயம் இருப்பார். ரோகித் இவர்மீது நம்பிக்கை கொண்டு பவர்-பிளே ஓவரில் பயன்படுத்துகிறார்.” என்றார்.