என்னோட கிரிக்கெட் வாழ்க்கைல ரவி சாஸ்திரி, ஜாவித் மியாடத் ரெண்டு பேரோட ஆட்டத்துக்கு பின், ரிங்கு சிங் ஆட்டத்துக்கு மிரண்டு விட்டேன் – ட்ரெஸ்ஸிங் ரூமில் பாராட்டிய கொல்கத்தா அணியின் கோச்!

0
514

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நான் பார்த்த சிறந்த பேட்டிங்கில் இது தான் மிகச்சிறந்தது என்று பேசியுள்ளார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கோச் சந்திரகாந்த் பண்டிட்.

கொல்கத்தா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி பல்வேறு ட்விஸ்ட்கள் மற்றும் த்ரில் நிறைந்ததாக இருந்தது. ஐபிஎல் கிரிக்கெட்டில் மறக்க முடியாத ஒன்றாகவும் மாறிப்போனது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்து குஜராத் அணி 204 ரன்கள் அடிக்க, 205 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நித்திஷ் ரானா(45) மற்றும் வெங்கடேஷ் ஐயர்(83) இருவரும் நல்ல அடித்தளம் அமைத்துச் சென்றனர்.

பலம்மிக்க குஜராத் அணி அவ்வளவு எளிதாக விடுகொடுக்கவில்லை. நத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் தனது அபார பந்துவீச்சால் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி திகில் உண்டாக்கினார்.

பின்னர் ரிங்கு சிங், கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவை என்று இருந்தபோது 5 சிக்ஸர்கள் விளாசி கொல்கத்தா அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுத்தந்தார்.

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து போட்டியை ஜெயித்துக்கொடுத்த ரிங்கு சிங், அனைவராலும் பராட்டப்பட்டு வருகிறார். அணி நிர்வாகமும் அவருக்கு உரிய பாராட்டு மற்றும் அங்கீகாரத்தை ட்ரெஸ்ஸிங் ரூமில் கொடுத்துள்ளது.

போட்டி முடிந்தபின், அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் கூறுகையில், ” என்னுடைய இத்தனை வருட கிரிக்கெட் வாழ்க்கையில் வீரராகவும் பயிற்சியாளராகவும் இருந்தபோது பல போட்டிகளை பார்த்திருக்கிறேன். அதில் என்னை இரண்டு போட்டிகள் வியக்க வைத்தது. ஒன்று ரஞ்சிக்கோப்பையில் ரவி சாஸ்திரி அடித்த ஒரே ஓவர் 6 சிக்ஸர்கள், இரண்டாவது கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற்றுக் கொடுத்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாவித் மியாடத் ஆட்டம். இரண்டையும் மிஞ்சும் அளவிற்கு இன்றைய போட்டியில் ஆடிய ரிங்கு சிங் ஆட்டம் இருந்தது. இப்படி ஒரு ஆட்டத்தை இதுவரை நான் கண்டதில்லை.” என்று பாராட்டினார்.

மேலும் பேசிய அவர், “கடைசி ஓவரின் முதல் பந்தில் உமேஷ் யாதவ் அடித்துக் கொடுத்த அந்த சிங்கிலை எவரும் மறந்துவிடக்கூடாது. அதுவும் இக்கட்டான சூழலில் வந்ததுதான். மேலும் வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா இருவரும் மிக சிறப்பாக ஆடினர்.” என்றும் பாராட்டினார்.