“என் விஷயத்தில் இந்திய தேர்வாளர்கள்…” மௌனம் கலைத்த இசான் கிசான்!

0
355
Ishan kishan

ஆடம் கில்கிறிஸ்ட் கிரிக்கெட் உலகில் ஒரு முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியவர். இவர் வருகைக்கு முன்னால் விக்கெட் கீப்பர் என்பவர் விக்கெட் கீப்பிங் வேலையை செய்தால் போதும். பெரிதாய் பேட்டிங் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் இவரது வருகைக்குப் பின்னால் ஒரு விக்கெட் கீப்பர் பேட்டிங்கும் செய்தால், அது அனுப்பி எவ்வளவு பெரிய உபயோகமானதாக இருக்கும் என்று தெரிந்தது.

பின்பு ஒவ்வொரு நாடுகளும் கில்கிறிஸ்ட் போல ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனை தேட ஆரம்பித்தன. இப்படியான தேடலில் இந்திய அணிக்கு முதன்முதலில் கிடைத்தவர் மகேந்திர சிங் தோனி. பின்பு டோனி இந்திய அணிக்கு கேப்டனாக உலக கோப்பைகளை வென்று கொடுத்தது எல்லாம் வரலாறு.

- Advertisement -

ஆனால் இவருக்கு முன்பு இந்திய அணியில் நயன் மோங்கியா, விஜய் தாகியா, தீப் தாஸ்குப்தா என இன்னும் பல விக்கெட் கீப்பர்கள் வந்து போய்க் கொண்டேதான் இருந்தார்கள். ஆனால் யாரும் பெரிதாய் பேட்டிங்கில் பங்களிப்பு செய்யவில்லை. இதனால் சவுரவ் கங்குலி கேப்டன் ஆன பிறகு ராகுல் டிராவிட்டை விக்கெட் கீப்பர் ஆக்கி அணிக்குள் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை கொண்டுவந்தார். சிலகாலம் ராகுல் டிராவிட் இந்திய அணியில் நிரந்தர கீப்பர் ஆகவே தொடர்ந்தார். இதற்குப் பிறகுதான் மகேந்திர சிங் தோனி கிடைத்தார்.

இன்று இந்திய கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் என்று தனியே ஒரு பெரிய பட்டாளமே இருக்கிறது. ரிஷப் பண்ட், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், கே எஸ் பரத், கே எல் ராகுல் என இந்தப் பட்டியல் நீள்கிறது. விக்கெட் கீப்பர் களை வைத்து மட்டுமே இந்திய அணிக்காக ஒரு பேட்டிங் யூனிட்டை உருவாக்கலாம்.

இதில் கடந்த டி20 உலகக் கோப்பையின் போது மூன்றாவது மாற்று துவக்க ஆட்டக்காரராக இடதுகை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இஷான் கிஷானை தேர்வு செய்தார்கள். மேலும் நியூசிலாந்து அணியுடனான போட்டியில் விளையாட வாய்ப்பு கொடுத்தார்கள். ஆனால் அதில் அவர் பெரிதாய் ஜொலிக்கவில்லை.

- Advertisement -

என்பது இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை அணி ஹைதராபாத் அணியோடு விடாது போட்டியிட்டு 15 கோடிக்கு இஷான் கிஷானை வாங்கியது. ஆனால் இந்த வருடம் தொடரில் மும்பை அணிக்காக இவரது பங்களிப்பு பெரியதாக இல்லை. ஆனாலும் ஐபிஎல் முடிந்து இந்தியாவில் நடந்த சவுத் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரில் இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்தத் தொடரில் இவர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். இதைத்தொடர்ந்து அயர்லாந்து இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் என இவருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் ஆடும் அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆசியக் கோப்பை மொத்த அணியிலும் இவருக்கு இடமில்லை.

தற்போது இதுகுறித்து இஷான் கிஷான் பேசியிருக்கிறார். அதில் அவர் ” என் தேர்வு விஷயத்தில் தேர்வாளர்கள் நியாயமாகவே நடந்து உள்ளார்கள் என்று நினைக்கிறேன். நான் ஆசிய கோப்பை அணிக்கு தீர்வாகாது போனது நல்ல விஷயம் தான். ஏனென்றால் இதனால் எனது பயிற்சிகள் இன்னும் கடுமையாகும். இதன் மூலம் நான் மீண்டும் ஐபிஎல் தொடரில் ரன்களை குவிப்பேன். தேர்வாளர்கள் என்னை தேர்வு செய்யும்படி செய்தேன். வெளிப்படையாக அணியில் எனக்கு ஒரு நிரந்தர இடத்தை பிடிப்பேன்” என்று மிக நம்பிக்கையாக பேசியிருக்கிறார்!