பந்துவீச்சில் அர்ஸ்தீப், பேட்டிங்கில் சூரியகுமார் அசத்தல்; இந்திய அணி அபார வெற்றி!

0
1795
Sa vs Ind

தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. டி20 தொடரின் முதல் போட்டி இன்று கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மைதானத்தில் நடந்தது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தீபக் சஹர், அர்ஸ்தீப், அஸ்வின், ரிஷப் பண்ட் ஆகியோர் புதிதாக இடம் பெற்று இருந்தனர். இன்றைய போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா, சாகல் விளையாடவில்லை. இந்தத் தொடரில் ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பேட்டிங் செய்ய களம் புகுந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சஹர் மற்றும் அர்ஸ்தீப் சிங் இருவரும் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தனர். தீபக் சகர் வீசிய ஆட்டத்தின் முதல் மற்றும் மூன்றாவது ஓவரில் 2 விக்கெட்டுகள் விழுந்தது. அர்ஸ்தீப் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் 3 விக்கெட்டுகளை விழுந்தது. முதல் எட்டு ரன்களுக்கு தென்ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து விட்டது. களத்தில் நின்ற கடைசி பேட்ஸ்மேன் எய்டன் மார்க்ரம் ஹாஸ்டல் படேல் வீசிய ஆட்டத்தின் ஏழாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

இதற்கடுத்து வேகப்பந்து வீச்சாளர் பார்னல் மற்றும் கேசவ மகராஜ் இருவரும் சேர்ந்து தென் ஆப்பிரிக்க அணியை மீட்டெடுக்க முயற்சி செய்தனர். இதில் கேசவன் மகராஜ் மட்டும் முப்பத்தி ஐந்து பந்துகள் சந்தித்து 41 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 107 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அர்ஸ்தீப் 4 ஓவர்கள் பந்துவீசி 32 ரன்கள் தந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீபக் சஹர் மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். அஸ்வின் விக்கெட் ஏதும் வீழ்த்தாமல், 4 ஓவர்கள் வீசி பெரும் 8 ரன்கள் மட்டுமே தந்தார்.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் மிகவும் சோதனையை தந்தனர். ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும், விராட் கோலி 3 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதற்கடுத்து ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் பொறுமையாக விளையாட, சூரியகுமார் யாதவ் அதிரடியில் வழக்கம்போல் மிரட்டினார். கே எல் ராகுல் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 56 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். சூரியகுமார் யாதவ் 33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடக்கம். இறுதியில் இந்திய அணி 14.4 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது டி20 போட்டி கவுகாத்தி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது!

- Advertisement -