பிரியாவிடை.. தமிழக வீரர் உட்பட.. 2024-ல் ஓய்வு பெற வாய்ப்புள்ள 4 இந்திய வீரர்கள்

0
407

2023ஆம் ஆண்டு முரளி விஜய் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டனர். ஒவ்வொரு வருடமும் ஒரு சில இந்திய வீரர்கள் தங்களது ஓய்வு முடிவை வெளியிடுகின்றனர். எனவே இந்த ஆண்டும் சில இந்திய வீரர்கள் தங்களது ஓய்வு முடிவினை வெளியிட வாய்ப்புள்ளது. அவர்களில் நான்கு முக்கிய வீரர்களை பற்றி கட்டுரையில் காண்போம்.

ஷிகர் தவான்

- Advertisement -

தவான் 2023ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது பெயர் இடம்பெறவில்லை. எனவே நீல நிற ஜெர்சியில் இதுவே அவரது கடைசி ஆண்டாகவும் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் உள்நாட்டு தொடர்களிலும் அவரது பங்களிப்பு சுறுசுறுப்பாக இல்லை என்று கருதப்படுகிறது.

இந்த ஆண்டு அவர் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் இறுதி ஆண்டாக இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் அவரின் உடல் தகுதி நன்றாக இருப்பதால் ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து களமிறங்க வாய்ப்புள்ளது. இவர் தற்போது ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். ஐபிஎல் இல் சிறப்பாக செயல்படுவதைத் தொடர்ந்து மேலும் சில ஆண்டுகள் விளையாடலாம்.

தினேஷ் கார்த்திக்

- Advertisement -

எம் எஸ் தோனி இந்திய அணியில் இடம் பெற்று இருக்காவிட்டால் இவர் தான் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடி இருப்பார். ஆனால் இவரது சீரற்ற பேட்டிங் ஃபார்ம் காரணமாக அணியில் நிரந்தர இடத்தைப் பிடிக்க முடியவில்லை. இருப்பினும் 2022ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைத் தொடரில் பங்கேற்று விளையாடினார். ஆனால் அதற்குப் பிறகு பெரிதாக ஃபார்ம் இல்லை.

எனவே அவருக்கு இந்து ஆண்டு கடைசி ஆண்டாக இருக்க கூடும் என்று தெரிகிறது. இவர் தற்போது ஐபிஎல்லில் பெங்களூர் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு நன்றாக விளையாடினால் இவரும் சில ஆண்டுகள் பெங்களூர் அணிக்காக விளையாடலாம். இவர் சமீபத்தில் விஜய் ஹசாரே டிராபியில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார்.

விருத்திமான் சாகா

சகா இந்திய அணியில் விளையாடவில்லை என்றாலும், உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து தனது பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அதைத்தொடர்ந்து ஐபிஎல்லிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் ஐபிஎல் தொடர்களில் அவ்வப்போது சிறந்த இன்னிங்ஸ்களையும் வெளிப்படுத்தக் கூடியவர். இவர் தற்போது குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது இவருக்கு பேக் அப் ஆக குஜராத் அணியில் ராபின்மின்ஸ் இருக்கிறார். எனவே இந்த ஆண்டு இவருக்கு கடைசி ஐபிஎல் ஆக இருக்கும் பட்சத்தில் அனைவரின் பார்வையும் இவர் மீது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அமித் மிஸ்ரா

2024ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறக் கூடிய வீரர்களில் அமித் மிஸ்ராவும் ஒருவர். ஆனால் இவர் இன்னும் ஓய்வு பெறவில்லை என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி இவரை எடுத்து ஆச்சரியப்படுத்தியது. இருப்பினும் இவரது பந்துவீச்சு செயல்பாடு சிறப்பாக இருந்தது. அணிக்குத் தேவையான நேரத்தில் முக்கியமான விக்கெட்டுகளை எடுத்தும் அசத்தினார்.

இதனால் 2024 இல் லக்னோ அணியால் தக்கவைக்கப்பட்டார். பெரும்பாலும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு வயது என்பது ஒரு பொருட்டாக இருக்காது. எனவே இவர் விரும்பும் பட்சத்தில் இன்னும் ஒன்று அல்லது இரண்டு சீசன்களில் விளையாடலாம்.