இந்திய அணியில் இது மிஸ் ஆகிறது, அதுதான் 2011க்கும் இப்போதுள்ள இந்திய அணிக்கும் உள்ள வித்தியாசம்! – ரவி சாஸ்திரி பேட்டி!

0
386

“2011இல் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கும், இப்போது இருக்கும் இந்திய அணிக்கும் இடையே இந்த ஒரு வித்தியாசம் மட்டுமே இருக்கிறது. இது இந்திய அணிக்கு ஏமாற்றத்தையும் கொடுக்கலாம்.” என்று கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி 1983 மற்றும் 2011 ஆகிய வருடங்களில் உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. 1983 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்று இந்த வருடம் ஜூன் மாதத்தோடு 40 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இதற்காக அப்போது உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த முன்னாள் வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ரியூனியன் செய்து கொண்டாடினர்.

- Advertisement -

இந்த வருடம் 50 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. கடைசியாக 2011ஆம் ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெற்றது. அப்போது தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று வரலாறு படைத்தது. அது போன்ற ஒரு வரலாறு இந்த முறையும் நடைபெறுமா? என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றிய வீரரும் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2011 இல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இப்படி ஒரு வீரர்கள் இருந்தனர் ஆனால் இப்போது இருக்கும் இந்திய அணியில் அது மிஸ் ஆகிறது என்று சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.

“இந்த வருட உலகக்கோப்பை மிகவும் போட்டி நிறைந்ததாக இருக்கப்போகிறது. சரியான பேலன்ஸ் கொண்டிருக்கும் அணி கோப்பைகளை வெல்வதற்கு அநேக வாய்ப்புகள் இருக்கிறது. ஒவ்வொரு வீரர்களின் ஃபார்ம் என்பது மிகவும் முக்கியம். அதேநேரம் சரிவிகிதமான இடது-வலது கை பேட்ஸ்மேன்களை கொண்ட அணிக்கு தான் வாய்ப்புகள் பிரகாசம்.

- Advertisement -

இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பது மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்குமா? என்றால், அப்படி பொதுவாக சொல்லிட இயலாது. அதேநேரம் டாப் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பது மிகவும் அவசியம். என்னை பொறுத்தவரை முதல் ஆறு பேட்ஸ்மேன்களில் குறைந்தபட்சம் இரண்டு பேர் இடது கை பேட்ஸ்மேன்களாக இருக்க வேண்டும்.

வரலாறு நெடுக நாம் எடுத்துப் பார்க்கையில், இடது கை பேட்ஸமேன்களை சரி விகிதம் கொண்டஅணி உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. 1974இல் வெஸ்ட் இண்டீஸ் அணி டாப் ஆர்டரில் மூன்று இடது கை பேட்ஸ்மேன்களைக் கொண்டிருந்தது. அடுத்து 1979ஆம் ஆண்டும் அதே அணி விளையாடியது. 1983 ஆம் ஆண்டு ஒரு விதிவிலக்கு. அதில் எந்த இடதுகை பேட்ஸ்மன்களும் இல்லை. ஆனால் அது ஒரு மாறுபட்ட தொடர். அடுத்ததாக 1987 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியில் ஆலன் பார்டர் உட்பட 3 இடதுகை பேட்ஸ்மேன்கள் டாப் ஆர்டரில் இருந்தனர்.

1996 ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக்கோப்பையை வென்றது அதிலும் இடது கை பேட்ஸ்மேன்கள் இரண்டு பேர் டாப் பாடல்கள் இருந்தனர். அதில் ஜெயசூர்யா, ரனதுங்கா, அஷன்கா என 3 பேர் இடது கை பேட்ஸ்மேன்கள்.

2011இல் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் டாப் ஆர்டரில் யுவராஜ் சிங், கௌதம் கம்பீர் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் இருந்தனர். ஆனால் இப்போது இருக்கும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் இடது கை பேட்ஸ்மேன்ங்கள் இல்லை என்பது மிகப்பெரிய வித்தியாசத்தை உண்டாக்கும் என தோன்றுகிறது.

ரிஷப் பன்ட் துரதிஷ்டவசமாக இல்லை. ஆனால் அணியில் இசான் கிஷன் இருக்கின்றார். அதன் பிறகு வெளியில் திலக் வர்மா, ஜெய்ஸ்சால் போன்ற இளம் வீரர்களும் இருக்கின்றனர். உரிய வீரர்களை பயன்படுத்தி பேலன்ஸ் கொண்ட அணியை உருவாக்குங்கள்.

பின்னர், ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து மூன்று முறை உலகக்கோப்பையை வென்றது. அந்த அணியில் கில்கிரிஸ்ட், ஹைடன் என டாப் ஆர்டரில் ஆக்ரோஷமிக்க இடதுகை வீரர்கள் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.” என ரவி சாஸ்திரி பேசினார்.